பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

elp மூ

மூலப்படை: படையுள் சாலச் சிறந்தது மூலப்படையே. அப்படைவீரர் வாழையடி வாழைபோல் மன்னர்க்குப் படைத் தொழிலாற்றும் மறக்குலத்தினர். பரம்பரையாற் பெற்ற பேராண்மையும் மனத் திண்மையும் உடையவர்; பகைவரது வெம்மையைத் தாங்கி நிலைகுலையாது நின்று போரிடும் தன்மையர். இத்தகைய மூலப்படையைத் "தொல்படை” என்றார் திருவள்ளுவர் (762.) (தமிழர் வீரம். 13.)

மூலர்: மூலத்தைக் கண்டவர் மூலர். மூலம் என்பது மூலமாக முதன்மையாக ஆதாரமாக இருப்பது; அதுதான் வேர். அது அடி, கிழங்கு என்றும் பெயர்பெறும்.

(பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 215.)

மூழிவாய்: பூவிடு பெட்டி.

(சீவக. 833. நச்.)