பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

247

யா

யா: யானையைக் காட்டும் உருவ எழுத்துக்கள் மொகஞ் சதரோ அரப்பா நாகரிகத்தில் காணப்படுகின்றன. சீனாவில் மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்ட உருவ எழுத்துக்களில் யானையை நமது தமிழ் எழுத்தான ‘யா’ வைத் தலைகீழாக எழுதினாற்போல் எழுதினர். அதில் நான்கு கால்களும் துதிக் கையும் வாலும் காட்டப்பட ஆறு கோடுகள் ஓர் உடலுடன் சேர்க்கப்பட்டு எழுதப்பட்டன. யானையைக் குறிக்கும் உருவ எழுத்துப் பின்னர்ச் சீன மொழியில் முதல் அமைச்சரைக் குறித்து வழங்கிற்று. தமிழிலும் யா' என்ற எழுத்து தலைகீழாக எழுதப்பட்டால் யானையின் உருவெழுத்துப் போலத் தோன்று வதைக் காணலாம். யானைக்கும் ஆண், ஆண்டவன் என்று சொற்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கருதலாம். ஆதலின் யானையைக் குறிக்கும் எகிப்தியச் சொல்லாகிய (Abu) அப் (Aub) என்பதும் யானை என்ற தமிழ்ச் சொல்லும் மிக பழங்காலத்திலே தொடர்புடைய வரலாறுடையவை என்று கருதலாம்.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 317 - 372.)

-

யாக்கை: (1) யாக்கை எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டது. அஃது ஆக்கை என மருவிற்று.

(திருவாசக விரிவுரை. மறைமலை. 288.)

(2) யாக்கை என்பது பிணிப்பு. ஆன்மாவைச் சுக்கில சுரோணிதங்களிலே கூட்டிக் கட்டிவிக்கையினால் உடம்பிற்கு யாக்கை என்று பெயராயிற்று.

(நாலடி. யாக்கை நிலையாமை. தருமர்; விள. உ.)

யாப்பு: யாப்பு என்பது, அடிதோறும் பொருள்பெறச் செய்வதோர் செய்கை.

யாமம்: (1) யா - கட்டு. உயிர்களை உறக்கத்திற் பிணிப்பது.

(தொல். பொருள். 313. பேரா.)

(வடசொற்றமிழ் அகரவரிசை. 307.)