பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ஆதலின், வாதித்தல் - பேசுதல். வகுத்தல் என்ற தொழிற்பெயரும் பேசுதல் என்னும் குறிப்பில் வரும். இது கூறுதல் என்பதை ஒத்தது. கூறுதல் சொல்லல். கூறு- பிரிவு. இஃதன்றி வகுந்து என்றோர் அருஞ்சொல்லும் உளது.

-

வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க' (சிலம்பு. அடைக்கல. 17.) வரை சேர் வகுந்திற் கானத்துப் படினே”

(மலைபடு. 242.)

இவற்றில் வகுந்து என்னுஞ் சொல் 'வழி' என்ற பொரு ளுடன் வந்தது. இதை ஆராய்ந்து அமைத்துக்கொள்க.

(மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 86-8.)

வகை: வகை என்னுஞ் சொல் வகு என்ற அடியாற் பிறந்து இனம், கூறுபாடு, பகுப்பு, முறை, வழி என்ற நெருங்கிய ஒற்றுமை யுடைய ய பல பொருட்களைத் தரும் இதனின்றும் வகைப்படுதல், வகைப்படுத்தல் என்ற தொழிற் பெயர்களும் பிறக்கும். வகைப் படுத்தல் -பிரித்தல், பங்கிடுதல். அன்றியும் வகை என்பது தொகை என்பதற்கு எதிர்மொழி ஆதலால் அது தமிழ்ச்சொல் என்பதை எவரும் மறுக்கத் துணியார். பகை, மிகை, நகை முதலியன பகு, மிகு, தகு, நகு எனும் முன்னிலைகளினின்றும் தோன்றுவது காண்க.(மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 88-9.)

வஞ்சிப்பா: குறளும், சிந்தும் அல்லாத அடிகளை எல்லாம் வஞ்சித்து வருதலானும், புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த் தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என்று இப் பொருள்களை வஞ்சித்து வருதலாலும் வஞ்சி என்னும் திறமே போலும் வனப்பும் ஏற்புடைத்து ஆகலானும் வஞ்சி என்பதும் காரணக் குறி.

வஞ்சினம்: வஞ்சினமாவது மேற்கோள்.

(யா. வி. 55.)

(சிலப். பதிகம். 80. அடியார்.) வட்டுடை: முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை (சீவக. 468. நச்.)

விசேடம்.

வடி: வடு வகிருக்கோர் பெயர்.

(திருக்கோ. 32. பேரா.)

வடிம்பு: வடிம்பு - கால் விளிம்பு. வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக.

(கலி. 103. விளக்கம். பெருமழை.)

வடியாக்கிளவி: ஒரு கல்லினின்றும் சிற்ப நூல் வல்லா னால் வடித்து எடுக்கப்பட்டு அழகுற இலங்கும் உருவமே வடிவு