பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

255

தொகைவிரி என்பது, அவ்விரு ஆறும் பற்றித் தொகுத்து முன் நிறீஇ அந்நிறுத்த முறையானே பின்விரித்துக் கூறுதல்;

மொழிபெயர்த்து என்பது, பிறபாடையால் செய்யப்பட் பொருளினைத் தமிழ் நூலாகச் செய்வது. எனவே பொருள் பிறழாமை பெற்றாம். (தொல். பொருள். 652. பேரா.)

வள்ளி: கதிரொளி வெம்மை கலந்த ஆற்றலை உயிர் களுக்குத் தரா நிற்ப, நிலவொளி தண்மை கலந்த ஆற்றலை அவற்றிற்கு வழங்கி அவற்றைப் பேணி வளர்த்தலின் வள்ளி எனப்படுவதாயிற்று. அற்றேற் கதிரவனும் வெம்மை கலந்த ஆற்றலை வழங்கும் வண்மையுடையனாகலின் அவனையும் வள்ளி எனக் கூறல் வேண்டுமாம் பிறவெனின், அற்றன்று; வனின், அற்றன்று; கொடுமை கொடுமையோடடு கொடுக்கும் கொடையினைக் கொடை என்று எவரும் உயர்த்துக் கூறார். அஃது இன்றியமையாக் கொடையே ஆயினும், மற்று அகங்கனிந்து முகம்மலர்ந்து குளிர்ப்பக் கூறிக் கொடுக்கும் காடையினையே எவரும் மகிழ்ந்து புகழா நிற்பர். அங்ஙனமே, ஞாயிறு கொடுக்கும் மின்னாற்றல் இன்றியமையாத ஒன்றே ஆயினும் அது வெம்மையோடு கூடி இருத்தலின் அதனை ‘வண்மை’ என ஆசிரியன் கொண்டிலன்; மற்றுத்திங்கள் வழங்கும் தண்மை கலந்த மின்னொளி எவரானும் விரும்பி ஏற்கப்படும் குளிர்ச்சியுடைமையின் அதனையே ஆசிரியன் ‘வண்மை' என வேண்டினான். அதுவேயு மன்றிக் கதிரொளி வெய்யதாகலின் அஃது ஆண்டன்மைப் பாற்படும். நிலவொளி தண்ணிதாகலின் அது பெண்டன்மைப் பாற்படும். அப்பெண்பாற்றன்மையினை வள்ளி என்னுஞ் சொல் இகர விகுதியால் நன்குணர்த்துதலின் அது திங்கள் மண்டிலத்தின் வண்மைத் தன்மையினை அறி விக்கும் பெயராதற்குப் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க.

(செந்தமிழ்ச் செல்வி. 5 : 81 -82)

வள்ளுவர்: (1) “வளமையோன் எனல் ஓராரே” என்ற புலவர் புராணப் பாடலை எண்ணி, வளப்பம் உடை டையவர் வள்ளண்மை உடையவர் எனப் பொருள் காண்பர். திருவள்ளுவமாலைக்கு முதன் முதல் உரை இயற்றிய திருத்தணிகைச் சரவணப் பெரு மாளையர், "வள்ளுவர் என்பது வண்மையுடையவர் என்பதை விளக்கி நின்றதாகலின் அது வேதத்தில் இலைமறை காய்போல் பல இடங்களில் மறைந்து வெளிப்படாதிருந்த மெய்ப்பொருள் களை எல்லாம் தொகுத்து உலகத்தார்க்குக் கொடுத்து அருள் செய்தவர் என்னும் காரணம் பற்றி வந்த பெயர்" என்பர்.

(திருக்குறள் அழகும் அமைப்பும். 151-2)