பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

பலர்க்கும் பொதுவாய்க்கிடந்த நிலப்பரப்பு பின்பு ஒருவர்க்கோ அல்லது ஒவ்வொரு குடியினர்க்கோ உரியவாம் பல பகுதிகளாகப் பங்கிடப்பட்டு இடை இடையே வரம்பு உயர்த்தப்பட்டமையின் அவ்வாறு வரம்புக்கு உள்ளடங்கிய வயல்கள் வரப்புள் என்று வழங்கப்படுவன ஆயின.

(சிறுவர்க்கான செந்தமிழ். 65-66.)

வெளியார்: (1) அறியாத புல்லரை ‘வெளியார்' என்றது வயிரமில் மரத்தை ‘வெளிறு' என்னும் வழக்குப்பற்றி.

(திருக். 714. பரி.)

(2) வெளியார் என்பது வெள்ளியார்; அறிவுக் கேடர்.

(திருக். 714. காலிங்.)

வெறுக்கை: செல்வம், யாவும் வந்த செறிதலின் வெறுக்கை

எனப்பட்டது. வெறுத்தல் - செறிதல்.

(திருவிளை. வாதவூரடிகளுக்கு. 83. ந. மு. வே.)