பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

271

யோன்போல் விழையானாய் அவளோ தானாய் உருகி அவளைக் காணினும் காணவிடினும் அவள் தேமொழியைக் கேட்பினுங் கேளாவிடினும் அவளைப் புணரினும் புணரா விடினும் என்றும் ஒரு பெற்றிப்பட்ட வேட்கையோனாய் அவள் உணர்வெல்லாம் தன் உணர்வாய் அவளுயிரெல்லாம் தன் னுயிராய்க் கொண்டு நிற்கும்.

(மறைமலையடிகளாற் அறிவுரைக்கோவை. 131-132.)

அம்மா - அப்பா: பிள்ளைகள் வாயைத் திறக்குங்கால் அகர ஒலி இயல்பாற் பிறக்கப் பிறகு திறந்த வாயின் இதழ்களை ஒன்று பொருத்துங்கால் மகர ஒலி பிறக்க இவ்வாறு வாயைத் திறந்து மூடுதலால் 'அம்மா' என்னுஞ் சொற்றோன்றித் தாய்க்குப் பெயராய் வழங்குதல் காண்கின்றோம்; இங்ஙனமே, திறந்த வாயின் இதழ்களைச் சிறிது அழுந்தப் பொருத்துதலால் 'அப்பா' என்னுஞ் சொல் பிறந்து தந்தைக்குப் பெயராய் வழங்கப்படுகின்றது. இந்நிலவுலகத்தின்கண் உயிர் வாழும் எல்லா மக்களின் பிள்ளைகளும், அவர் ஒன்றோடொன்று வேறு பட்ட எத்தனை வகையான மொழிகளைப் பேசுவராயினும், முதலில் இயல்பாகத் தோற்றுவிக்கஞ் சொற்கள் அம்மா அப்பா என்பனவேயாம். இவ்விரண்டு சொற்களும் முதற் பிறக்கும் ஒலிகளாய் இருத்தலின் இவை எல்லா மொழிகளிலும் தாய் தந்தையரைக் குறிக்குஞ் சொற்களாகவே அமைவனவாயின. (சான்று: 'மதர்’ ‘பாதர்’ ஆங்கிலம்; ‘மாத்ரு’ ‘பித்ரு’ - ஆரியம்)

(மறைமலையடிகளாற் அறிவுரைக் கோவை. 49 - 50.) இலக்கணம்: இலக்கணம் என்ற சொல்லை முதன் முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரேயாவர். இவ் வாசிரியர் வழங்கிய இலக்கணம் என்ற சொல் சால் 'லக்ஷண லக்ஷண' என்ற வட சொல்லின் திரிபன்றாம். 'கொள்ளுமென்ப குறியறிந்தோரே’ என்புழிக் குறி என்ற சொல்லை ‘லக்ஷண' என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பாக ஆசிரியர் குறித்திலர். குறி என்பது நூல் என்னும் பொருளில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும். ‘ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின் பெருகநூலிற் பிழைபா டிலனே” என்புழிக் குறி என்னும் சொல் நூல் எனப் பொருள் தருதல் காண்க....... இலக்கணம் என்ற சொல் பல பொருளை யுய்த்துணர்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறிவித் தற்குக் காட்டப்படும் வரையறை என்ற பொருளிலேயே தொல்