பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

காப்பியனாரால் ஆளப்பெற்றது. இத்தமிழ்ச் சொல்லோடு ஒருபுடை ஓசையொற்றுமையுடைய லக்ஷண என்ற வடசொல்லைப் பாணினி முதலிய வடமொழி வியாகரண ஆசிரியர்கள் இப் பொருளில் வழங்கிற்றிலர். தொல்காப்பியனார் வழங்கிய இலக்கணம் என்னும் சொல்லுக்குரிய பொருளை லக்ஷணம் என்னும் சொல்லுக்கு ஏற்றி வழங்கியவர் தென்னாட்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவரேயாவர்.

(தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 113 - 114.)