பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

அகத்தியம் : தலைக் கழகத்து இலக்கணமாய் இருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழு இலக்கணமாய் இருந்ததினால் தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கே இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வரவேண்டுமாயின். அவரைத் தாங்கள் அகத்தியமாய் வர வேண்டும் என்று அழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. (சொல். கட். 15.)

அகநாழிகை : கர்ப்பக் கிரகத்திற்கு, அகநாழிகை என்றும் உண்ணாழி (உள்+நாழி) என்றும் தமிழ்ப்பெயர் உண்டு. அக‘ நாழிகை என்றும் திருவுண்ணாழிகை என்றும் சாசனங் களில் இச்சொல் காணப்படுகிறது. (துளுமொழியும் தமிழும். கட்)

அகப்பட்டி : அகப்பட்டி, தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி என்பது பட்டி மாடு. பட்டி மாடு போற் கட்டுக்காவலின்றித் திரிபவனைப் பட்டி என்றது உவம ஆகு பெயர். “நோதக்க செய்யும் சிறுபட்டி

(திருக்குறள் மரபுரை. 1074.)

அகம் : அகம் என்பது உயிர்களின் உணர்ச்சி இன்பம்; உயிர்கள் என்றால் ஆண் பெண் இருவகையே. அவ்விருவகை உயிர்களின் உள்ளத்துணர்ச்சி புறங்கூற இயலாத அளவுக்கு நுட்பமாய் அகத்தளவில் நிகழ்வதால் அது மட்டும் அவ்வியல்பு கருதி அகம் என வகுத்துக் கொள்ளப்பட்டது.

(திருக்குறள் அறம். 29.)

அகம்படியர் : நம்பூதிரி மணமகன், மணமகள் இல்லத் துக்கு முதன் முதல் செல்லும் பொழுது போர்க் கருவிகள் தாங்கிய விரர்கள் மணமகனுக்கு முன் செல்வர். அவர்கள் மணமகனுக்கு மெய்க்காவலர். இம் மெய்க்காவலர் அந்நாட்டில் ‘அகம்படியர்’ என்று அழைக்கப் பெறுவர்.

(தமிழ்மொழிச் செல்வம். 87.)

அகரம் : (1) அகரம் தனியே நிற்றலானும், பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய்