பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும்; அவை: தச்சுவினைமாக்கள் கண்ணும், களம்பாடும் வினைஞர் கண்ணும், கட்டுங்கழங்கு மிட்டு உரைப் பார் கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார் கண்ணும், பூசல் இசைப்பார்கண்ணும் கேட்கப்படும். கழங்கிட்டு உரைப்பார் அங்ஙனமே வழக்கின் உள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. (தொல். பொருள். 393. பேரா.)

6

அகழ் : அகழப்படுதலின் அகழ் என்றது ஆகுபெயர்.

(பெரும்பாண். 107-8. நச்.)

அங்கதம் : அங்கதம் என்பது வசை; அதனை இருவாற்றால் கூறுக என்பான் இதுகூறினான்... வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருள் அங்கதம் எனப்படும்... வசைப் பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பு அங்கதம். மாற்றரசனையும், அவன் இளங்கோவினையும் வசை கூறுமாறு போலாது தம் கோனையும் அவன் இளங்கோனையும் வசை கூறுங்கால் தாங்கி உரைப்பர்; அவை போலப் பழிப்பன என்றவாறு. (தொல். பொருள். 437-8. பேரா.)

அங்காடி பாரித்தல் : ஒரு கடைக்காரன் பேரூதியங் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டு வந்து நிறைத்தலுக்கு அங்காடி பாரித்தல் என்று பெயர். அவனைப் போலப் பேராசையினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக் கோட்டை கட்டுவதும் ‘அங்காடி பாரித்தல்' எனப்படும். (சொல். கட். 12.)

அச்சம் : (1) அச்சம் என்பது குறிப்பு இன்றியே தோன்றும் (இறையனார். 30. நக்.)

நடுக்கம்.

தான் காணப்

(2) அச்சம் என்பது பெண்மையின் படாததோர் பொருள் கண்ட இடத்து அஞ்சுவது.

இறையனார். 2. நக்.)

உருள்

அச்சாணி : அச்சு-உருள் கோத்த மரம்; ஆணி கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவால் சிறிதாய் இருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து. (திருக். 667, பரி.)

அச்சிரம் : அச்சிரம் என்பது மறைந்து போன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக் காலம் என்பது பொருள்... இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில் வழங்கி வருகிறது.