பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

19

வாயில் உண்டாகிற ஒருவித புண்ணுக்கு அச்சிரம் என்று பெயர் கூறப்படுகிறது... பனிக் காலத்தைக் குறிக்கும் அச்சிரம் என்னும் சொல் பனிக் காலத்தில் உண்டாகிய வாய்ப்புண் நோய்க்குப் பெயராயிற்று என்று தோன்றுகிறது.

(அஞ்சிறைத்தும்பி. 130-131)

அசுணமா : இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.) அசும்பு : சிறு திவலை. அசை : எழுத்து, அசைத்து இசை கோடலின் அசையே.

(திருக்கோ. 149. பேரா.)

(யா.வி. 1.)

அசைவு : அசைவு என்பது பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.

(தொல். பொருள். 253. பேரா.)

அட்டில் : அடுக்களை, வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை, சமைப்பதற்கென்று தனியாயுள்ள அறை; அட்டில், சமையலுக்குத் தனியாயுள்ள சிறுவீடு; ஆக்குப்புரை, விழாப் பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம்; மடை டம்; மடைப்பள்ளி, கோயிலை அல்லது மடத்தைச் சேர்ந்த சமையல் வீடு.

(சொல். கட். 50)

அட்டைக்குழி : அட்டைக்குழி, இருளுலகம், அளறு என நரகிற்குப் பெயரிருப்பதால், அட்டையிட்ட குழியிலும், இருட் டறையிலும், உளையிலும், பண்டைக் காலத்தில் குற்றவாளிகள் தள்ளப்பட்டனர் என்பது வெளியாகும்.

(சொல். கட். 24.)

அடக்கம் : (1) அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும், தணிந்த நடையும், தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின.

(தொல். பொருள். 250. பேரா.)

(2) அடக்கமாவது, பிறர் தன்னை வியந்து உரைக்கத்தான் அடங்கி இருத்தல். (நாலடி. 170. தருமர்.)

அடக்கியல் : உள்ளுறுப்பின் பொருளெல்லாம்

வகையான் அடக்கும் இயல்பிற்று ஆகலின் அடக்கியல்.

ஒரு

(தொல். பொருள். 444. பேரா.)