பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

21

மல்லவா! ஆகவே பாக்குக்கு அடைக்காய் என்று பெயர் உண்டாயிற்று. அடைக்காய் என்றால் அடையுடன் சேர்த்து உண்ணப்படும் காய் என்பது பொருள். கோவலன் உணவு காண்ட பிறகு கண்ணகி வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் என்பதை ‘அம்மென் திரைய லொடு அடைக்காய்' கொடுத் தாள் என்று சிலப்பதிகாரம் (16:55) கூறுகிறது. திரையல் வெற்றிலைச் சுருள். அடைக்காய் - பாக்கு. வெற்றிலை பாக்கு வைக்கும் பைக்கு அடைப்பை என்பது பெயர். "தமனிய அடைப்பை” (சிலப். 14:128) (அடைப்பை வைத்திருந்தவன் அடைப்பைக்காரன் என்று கூறப் பெற்றான்) (அஞ்சிறைத்தும்பி. 134-136)

அடைநிலை : அடைநிலை என்பது முன்னும் பின்னும் பிறஉறுப்புக்களை அடைந்தன்றி வாராது. அது தனிநின்று சீராதலின் தனிச் சொல் எனவும் படும்.

(தொல். பொருள். 444. பேரா.)

அண்ணல் : பெருமையிற் சிறந்தோன். இச்சொல் விO யேற்றக்கால் அண்ணால் என அயல் நீண்டு பின்னர்க் கடைக் குறைந்து அண்ணா என நின்றது.

(திருவாசக விரிவுரை. மறைமலை. 397.)

அணங்கு : (1) அணங் கென்பன, பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும், நிரயப் பாலரும், பிறரும் அணங்கு தல் தொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும், உருமிசைத் தொடக்கத்தனவும் எனப்படும்.

-

(தொல். பொருள். 256. பேரா)

பிறரால் உண்டாகும் வருத்தம். பிE - (குறுந்தொகை. 136. உ.வே.சா.)

(2) அணங்கு தன்பால் தோன்றும் நோய்.

அணல் : மோவாயின் கீழுள்ள தாடி.

(நற்றிணை. 179. அ. நாராயண.)

அணி : அணியப் பெறும் காரணம் பற்றி வந்த பெயர். இது சட்டை அணிதல், ஆடை அணிதல் போல எளிய முறையில் மாலைபோல அணியப் பெறும் கழுத்தணிகளைக் குறிக்க வந்த தாகலாம்; பின்னர்க் காலப் போக்கில் இவ்வொரு குறிப்பை ஒழித்து எல்லா நகைகட்கும் பொதுவான பெயராய் அமைந் திருக்கலாம். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 526.)