பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

அணி, ஆணி : இச் சொற்கள் வடமொழியில் வண்டியின் அச்சாணியைக் குறிக்கும். வடமொழி அறிஞர்கள் அண் என்ப தனைப் பகுதி என்பர். அப்பகுதிக்கு ஒலித்தல் என்பது பொரு ளாகும். திராவிட மொழிகளில் அண் என்பது சேர், தொடு, கட்டு, அருகே, மேல், அணிந்து கொள் (அணை, அணி, அணுகு, அணவு) என்னும் பொருளில் வழங்குகின்றது. எனவே ஆணியைத் திராவிடச் சொல்லாகக் கொள்வர் கால்டுவெல்.

(மு.வ.மொழிவரலாறு. 112-3.)

அந்தகன் : அந்தகன் - கூற்றுவன். அந்தத்தைச் செய்பவன் என்பது பொருள். (கல்லாடம். 27. பெருமழை.) அந்தணர் : (1) அந்தணர் - வேதாந்தத்தை எக்காலமும் (மதுரைக் காஞ்சி. 474. நச்.)

பார்ப்பார்.

(2) அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது, வேதாந்தத் தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார் என்றவாறு. (கலி. கடவுள். நச்.)

(3) அந்தணர் என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின் அஃது அவ் அருளுடையார் மேல் அன்றிச் செல்லாது என்பது கருத்து. (திருக். 30. பரி.)

(4) அந்தணர் என்னுஞ் சொல் அழகிய குளிர்ந்த அருளை உடையவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு அன்பு செய்தல். (திருக்குறள். மரபுரை. 30.)

(5) அம் - அழகு. தண் - குளிர்ச்சி. குளிர்ச்சியில் அழகிய குளிர்ச்சியாவது அருள். எனவே ‘அந்தணர்' என்பதற்கு ‘அருள் ஒழுக்கமுடையார்' என்பது இனிய செம்பொருள்.

(கலி. கடவுள். உரைவிளக்கம். இளவழ.)

(6) அந்தணர் என்ற சொல்லைத் திருவள்ளுவர் இல்லறத் தாரினும் துறவறத்தாரினும் எவ்வளவோ மேம்பட்ட மதிப் புடைய மேலோரைக் குறிக்கவே வழங்குகிறார் என்பது தெளிவு. ஏனெனில் அவர் கடவுளையே அந்தணன் என்று சுட்டத் தயங்கவில்லை. (குறள் : 8) இல்லறத்தாராகவோ, துறவறத் தாராகவோ வாழும் நிலையுடைய எவரையும், எச்சாதியினரை யும் எந்தப் பொது நிலை சிறப்பு நிலை மனிதரையும்கூட அது குறிக்க முடியாது என்று கூறத் தேவையில்லை. கிட்டத் தட்டக்