சொற்பொருள் நுண்மைவிளக்கம்
23
கடவுள் நிலையையே சென்று எட்டிக் கடவுள் பண்பையே அடைந்து விட்ட உச்ச உயர்நிலை வாய்ந்த இனத்தலைவர் களையே அது குறிப்பது ஆகும். நோன்பு நிலையும் தவநிலையும் துறவு நிலையும் தாண்டிக் கடவுளின் அன்பருள் திருவுருவேயாகி எவ்வுயிர்க்கும் தாயாகி நின்ற தண்ணளிப் பண்புடையாரே அந்தணர் (குறள் : 30) என்று திருவள்ளுவர் இச்சொல்லுக்குத் தாமே மே விளக்கம் தருகிறார். அவர் இத்தகைய உயர் பொருள் குறித்து வழங்கிய சொல்லை வேறு பொருளில் வழங்கும் உரிமை எவருக்கும் கிடையாது. (திருக்குறள் மணிவிளக்கவுரை. 80.)
அந்தணன் : அந்தணன் என்பதை அந்தம் + அணன் என்று பிரித்து மறை முடிபுகளைப் பொருத்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழியாளர். அம்+தன்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளுடையவர் என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள் கொள்ளினுங் கூட அணவு என்னுஞ் சொல் அண் என்னும் வேரிற் பிறந்த தனித்தமிழ்ச் சொல்லாதலின் அந்தணன் என்பது இருபிறப்பி (Hybrid) யாகும். அந்தணன் என்ற பெயர் அந்தணாளன் என்ற வடிவிலும் வழங்கும்.
·
(ஒப்பியன் மொழிநூல். முன்னுரை. 34.)
அந்தி : இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே காலவகையில் அந்தி எனப்பட்டது. காலை யில் நிகழ்வது காலை அந்தி என்றும், மாலையில் நிகழ்வது மாலை அந்தி என்றும் சொல்லப் பெறும்.
66
காலை அந்தியும் மாலை அந்தியும்”
(புறம். 34) காலை அந்திக்கு முன்னந்தி வெள்ளந்தி என்றும் மாலை அந்திக்குப் பின்னந்தி செவ்வந்தி என்றும் பெயருண்டு.
அந்தி என்னும் பொதுச் சொல் சிறப்பாக ஆளப் பெறும் போது மாலை அந்தியையே குறிக்குமென்பது, அந்திக் கடை, அந்திக் காப்பு, அந்தி மல்லிகை, அந்திவண்ணன், அந்திவேளை முதலிய சொல் வழக்கால் அறியப் பெறும்.
வகையில் அந்தி என்பது முத்தெருக்கள் கூடும் டத்தைக் குறிக்கும்.
66
“அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்"
(சிலப். 14 : 213)
பிற்காலத்தில் அந்தி என்னும் சொல் சகரமெய் முன்னிடப் பெற்றுச் சந்தி என்றாயிற்று.