சொற்பொருள் நுண்மைவிளக்கம் அலர் என்பது சேரி அறிதல்; அம்பல் என்பது சேரி அழிதல் அலர் என்பது ஊர் அறிதல்; அம்பல் என்பது ஊர் அறிதல்,
அலர் என்பது நாடு அறிதல்;
25
அம்பல் என்பது நாடு அறிதல்,
அலர் என்பது தேசம் அறிதல்;
(இறையனார்.22. நக்.)
(2) ஒரு வினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப் படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் /அரும்பு; அலர் / விரிந்த மலர். (சொல். கட். 8.)
அம்போதரங்கம் : நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம். (தொல். பொருள். 452 பேரா.)
ச்
அம்மாயி : அம்மை (தாய்)யின் உடன் பிறந்தவன் அம்மான் எனப்படுதல் வழக்கம். அம்மான் என்பதற்கு ஏற்ற பெண் பாற்சொல் வழக்கில் இல்லை. ஆயின் மலையாளத்தில் இ சொல் இன்றளவும் வழக்கில் இருக்கின்றது. அங்குத் தாய் மாமன் மனைவி அம்மாயி என்று அழைக்கப்படுகிறாள்.
(தமிழ்மொழிச் செல்வம். 89.)
அமரர் : (1) அமரர் என்பார் அடங்கியவர். அடக்க முடையவரை அமரிக்கை உள்ளவர் என்ப.
(கலி. 1. உரைவிளக்கம். இளவழ)
(2) அமரர் என்பது அமர் என்பதன் அடியாகப் பிறந்த குறிப்பு வினைப் பெயர். அமர் என்பது போட்டி - போர் எனும் பொருளில் வரும். அதனால் அமரர் என்பதும் வீரர் அல்லது பொருதுவோர் எனப் பொருள்படல் இயல்பாம்.
(தொல். பொருள். புறத்திணை. 26. ச.சோ.)
அமரன் : அமரினால் தேவர் உலகை அடைந்தவன்.
(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 347)