பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

31

அலை : அலை என்பது கோல் கொண்டு அலைத்தல் முதலாயின. (அலை - துன்புறுத்தல்.)

அவா : (1) அவா - கொடுத்த பொருள்மேல் ஆசை.

(தொல். பொருள். 258. பேரா.)

(திருக். 35. ப. உ.)

(2) வாயினால் பற்றுதல்போல் மனத்தினாற் பற்றும்ஆசை. (முதல் தாய்மொழி. 12.)

(3) ‘அ’ என்னும் எழுத்தை ஒலிப்பதற்குச் சிறிது வாய் திறக்க நேர்கிறது. பின்னும் பெருக வாய் திறக்கும் அளவுக்கு ஏற்ப ‘ஆ' என்னும் எழுத்து நீண்டு ஒலிக்கிறது. 'அ', என்னும் இரண்டெழுத்துக்களும் சேர்ந்தால் போதும், 'அவா' என்னும் ஓரசைச் சிறு சொல் உருவாகிவிடும். பெருக வாயைத் திறத்தல், திறந்த வாயை மூடாதிருத்தல் என்னும் செய்கைகளைக் கொண்டதாய் ‘அவா’ என்னும் சொல் பிறக்கின்றது. 'நிறைவு கொள்ளாத இயல்பை’ 'ஆ' என வாய் திறத்தலாகக் கூறுவது வழக்கம். செய்கையும் கருத்தும் சொற்பிறப்பும் வடிவும் எல்லாம் ஒருங்கு இழைந்ததாய்த் தோற்றுகிறது ‘அவா' என்னுந் தமிழ்ச் சொல். (திருக்குறள் அறம். 41.)

அவித்தல் : அவித்தல் என்பது அழித்தல் அன்று. (புலன் களின்) முனைப்புக் கெடுத்துத் தன் வயப்படுத்தி ஆட்கொள் வதையே அது குறிக்கும். காய்கறிகளை நாம் அவிப்பது அவற்றை அழிப்பதற்கோ, சுட்டுக் கருக்குவதற்கோ சுவை கெடுப்பதற்கோ அன்று. அவற்றின் கடுமை, கடுப்புப் போக்கிப் பதப்படுத்திச் சுவைக்கு உகந்ததாக்குவதற்கேயாம்.

(திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ. 310) அவிநயம் : (1) கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து.

(சிலம்பு. 3 : 12. அடியார்.)

3

(2) அவிநயமாவது, கதை தழுவாதே பாட்டுக்களின் பொருள் தோன்றக் கைகொட்டியவிநயிப்பது. (சீவக.6722. நச்.)

அவை : (1) அவை என்பது அவற்றினும் (முன்னின்ற வற்றினும்) சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா.)