பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

(2)

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

அமைதல் நெருங்குதல், கூடுதல்.

அமை = கூட்டம்.

அமை = அவை. ஒ. நோ : அம்மை - அவ்வை.

குமி - குவி.

(வடமொழி வரலாறு. 80.)

அவை அடக்கியல் : அவையை வாழ்த்துதல். அவை அடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக் கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதல் ஆயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது, அவையத்தார் அடங்குமாற்றால் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல்.

(தொல். பொருள். 423. பேரா.)

அழகு : அழகு என்ற பொருளில் அணி என்ற சொல் அழகு, அந்தம், அம், ஏர், வனப்பு, மாதர், மயல் முதலிய பல சொற் களுடன் பொருள் தொடர்புடையது. இவற்றுள் அம், அந்தம், ஏர் ஆகியவை கணநேரக் கவர்ச்சி மட்டுமே தருவது. கணநேரக் கவர்ச்சியைப் புதிது புதிதாகத் தருவது. மாதர் என்பது கவர்ச்சி யுடன் செயலற்ற மயக்கம் தருவது. மயல் என்பதும் அது. அழகு என்பது பலருக்குக் கணக் கவர்ச்சியும் சிலர்க்கு நிலைக் கவர்ச்சி யும், ஒருவர்க்கே நிலையான கவர்ச்சி எதிர் கவர்ச்சியும் தருவது. அழகு ஒன்றே சமுதாயங் கடந்த இனக்கவர்ச்சி என்பதை இது காட்டுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை III. 484.)

அழல்தடம் : தீக்காய் கலம்.

அழுக்காறாமை

(திருக்கோ. 202. பேரா.)

L

(1) அழுக்காறாமையாவது பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வருகின்ற மனக் கோட்டத்தைச் செய்யாமை.

(திருக்குறள் அழுக்காறாமை. மணக்.)

(2) அழுக்காறாமையாவது பிறர் செல்வங்கண்டு இவ னுக்கு இந்தப் பாக்கியம் வந்ததே என்று சொல்லும் மன அழுக்கை விடுக என்றவாறு. (திருக். அழுக்காறாமை. பரிதி.)

அழுக்காறு : (1) அறு என்பது ‘வகு' என்னும் பொருட்டு. வகுக்கப்பட்டது வழி. அறுக்கப்பட்டது ஆறு. ஆறு எனினும் வழி எனினும் ஒக்கும். அழுக்கான ஆற்றில் உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. (திருக். தண்ட. அதி. 17.)