சொற்பொருள் நுண்மைவிளக்கம்
35
அளிகுலம் : 'கழுநீர் மலரல்லது ஊதாமை' உடையது. (திருக்கோ. 123: பேரா.) அறக்கண்: அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். “அறக்கண் என்னத் தகும் அடிகள்’
&
டம்.
(சுந்தரர் தேவாரம் - செந்தமிழ்ச் செல்வி. 2: 78) அறங்கூறு அவையம்: தருமாசனத்தார் வழக்குரைக்கும் (சிலம்பு. 5: 135 அடியார்.) அறங்கூறு அவையத்தார்: தலைநகரிலிருந்து வழக் காராய்ந்து நீதி செலுத்துபவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.) அறம்: (1) அறமாவது, உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியம் சொல்லுதலும் தான தருமங்களைச் செய்தலுமாம்.
(நாலடி. அறன் வலியுறுத்தல். விளக்கவுரை).
(2) அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள் படும். அம் மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்' என்றார்.
(திருக்குறள் 34. தண்ட.)
(3) அறம் என்பது எதுவாக இருந்தாலும், அஃது உலக வாழ்விற்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். வாழ்விற்கு உகந்த தாக இருத்தல் வேண்டும். வாழ்விற்கு வளம் அளிப்பதாக அஃது அமைதல் வேண்டும். (குறள் கூறும் சட்டநெறி. 6.)
(4) அறு + அம்: அறுக்கப்பட்டது; மனுமுதலிய நூல் களால் இன்னன செய்க இன்னன தவிர்க என வரையறுத்துக் கூறப்பட்டமைபற்றி “அறம்” என்பது அங்ஙனம் அறுத்துரைக்கப் பட்ட தருமத்திற்காயிற்று. ஈண்டு ‘அம்’ செயப்படுபொருண்மை விகுதி. தொழிலாகு பெயர். (தமிழ் வியாசங்கள் 52).
(5) அறம் என்பது தமிழ்ச்சொல். இதனை வடி நூலார் தர்மம் என்பர். அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது; ஆகவே ஒருவனுடைய நினைவு சொற் செயல் களின் தீமையை அறுப்பதே அறம் என்னுஞ் சொல்லுக்குப் பொருளாதல் பெறப்படும். (இளைஞர்க்கான இன்றமிழ். 130).