பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

விற்றுரிமையற்றதற்கு அறிகுறியாகிய

பலவற்றையுமுணர்த்துவதாயிற்று.

விலைச்சீட்டுமாகிய

(தமிழ்வியா. 53.)

அறுப்பு: (1) அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர்பேச்சை அவர்பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆட் சேபத்தையும் உணர்த்திற்று. (தமிழ்வியா. 54.)

(2) அறுப்பு என்பதில் ‘அறு’ முதனிலை; அறுவை, அறம், அற்றல், அறுதி, அற்றம் என்பன வெல்லாம் அறுவால் தோன்று வனவே. அற்றம் = முடிவு. (குறள், குற்றங்களைதல்.4) அறுவை = துணி, அறுக்கப்பட்டது: (சிறுபாண். 236) அறம் = வரையறுக்கப் பட்டது. அறல், அறுத்தல், அறுகை முதலியவற்றையும் ஆராய்க. ஆறு, அறை என்பவையின் தோற்றம் உணர எளிதே. அறுத்தல் என்பது பிரித்தல். துணித்தல் என்பதன் பொருளும் அஃதே. உள நிகழ்ச்சியைக் காட்டும். பொருட்டுத் துணித்தல் என்பது துணிதல் என்று நின்றவாறு அறுத்தல் என்பது அறிதல் என்று நிற்கும். ஆதலின் அறிதல் உணர்தல். ( பகுத்துணர்தல் பிரித்துப் பார்த்தல்)

-

(செந்தமிழ்ச் செல்வி. 2: 140 -141.)

அறும்பு: கொடுமை, பஞ்சகாலம்; 'அறுப்பு' என்பது மெலித்தல் விகாரம் பெற்று ‘அறும்பு' என நின்றது. நன்மை யற்றுக் கொடுமையையும் நாட்டின்கண் உணவுப் பொருட் களெல்லாம் அறுங்காலமாதலிற் பஞ்சகாலத்தையுங் குறிப்ப தாயிற்று. (தமிழ் வியா. 54)

-

அறுவை: துகில் அல்லது வஸ்திரம். நீளமாக ஒரே நிலை யாய் நெய்ததனை இடையிடையே யறுத்துத் தனித்தனி வஸ்திர மாக்குதலின் துகிலை யுணர்த்துவதாயிற்று. அறுக்கப் பட்டது அறுவை; ஈண்டு 'ஐ' செயப்படு பொருண்மை விகுதி முன் காலத்தில், (இக்காலத்திலும் பலவிடங்களில்), சாலியர் தறியின் கண் ஆடைநெய்கையில் ஒரே நிரையாய் நீளநெய்து கொண்டே போவார்கள். அவ்வாறே முழுதும் நெய்த பின்னர் அறுத்தற்கென டம் ம் விட்டிருந்த இடங்களில் அறுத்துத் தனித்தனியுடையாக்கு வார்கள். இவ்வழக்கத்தையநுசரித்தே நம் தமிழ்மொழியின் கண்ணே பிறசொற்களும் பிறந்திருக்கின்றன. உதாரணமாகத் 'துணி', 'துண்டு', 'கூறை' முதலிய சொற்களின் பொருட் காரணத்தையுமுய்த்துணர்க. துணிக்கப் படுதலிற் றுணியும்,

று