பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

39

துண்டிக்கப்படுதலிற் றுண்டும், கூறுபடுத்தப்படுதலிற் கூறையு (தமிழ் வியா. 54),

மாயின.

அறை: இஃது உள், மலை, முழைஞ்சு, குறை, திரை, பாத்தி, பாறை முதலிய பலபொருள் பயப்பதோர் சொல் நான்கு பக்கங் களினும் மதிலெழுப்பி ஏனைய இடங்களினின்றும் அறுக்கப் படுதலின் உள்ளாம்; மலையின்கண் அறுத்த குடைந்து குகை செய்யப்படுதலின் முழைஞ்சாம்; அற்றது குறைந்ததா மாதலிற் குறையாம்; கடலின் நீர்ப்பரப்பினின்றும் அற்று எழுந்து மறிந்து வீழ்தலில் திரையாம்; நிலத்தின்கட் கரை கோலப்பட்டு மற்றையவற்றினின்றும் அறுபட்டு நிற்றலிற் பாத்தியாம்; நிலப் பரப்பினை யறுத்துக் கொண்டு மேலெழும்பித் துறுத்து நிற்ற லிற் பாறையாம். (தமிழ் வியா. 55)

அற்றம்: அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை முதலிய பலபொருள் பயப்பது. தைரிய மறுதலின் அச்சமும், வாழ்வறுதலின் அழிவும், தன்னொடு மிடைந்த பொய் முதலியவற்றினின்றும் அறுதலின் உண்மையும், பொருள் முதலாயின அற்ற சமயமும் வலியற்ற சோர்வும் மெலிவும் கண்கூடற்ற மறைவும், பொருளறுதலின் வறுமையு (தமிழ் வியா. 55.)

மாம்.

அற்றை: சிறுமை. மேன்மையற்று நிற்கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று. (தமிழ் வியா. 55.)

காதல்.

அன்பு:

(1) அன்பு எனப்படுவது தன் கிளை செறாமை. (கலி. 133) (2) அன்பாவது தன்னால் புரக்கப்படுவார் மேல் உளதாகிய

(புறம். 5. ப, 2.) (தொல். பொருள். 53. நச்)

(3) அன்பு எனப்பட்டது, தான் வேண்டப்பட்ட பொரு ளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி... ‘அது குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும் போல' இது காண் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது. அன்பு உடையரான குணங் கண்ட விடத்து இவை உண்மையான் ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற் பாற்று. இறையனார். 1. நச்.)

(4) அன்பு என்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். அஃது உடையார்க்குப் பிறன்கண் துன்பம் கண்டுழிக்