பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

இனத்தவர், ஆன் இனத்தவர், ஆட்டினத்தவர் என்க. கோவினத் தாயரை நல்லினத்தாயர் என்பது வழக்கு.

(கலி. 111. உரைவிளக்கம். இளவழ)

ஆயிரம்: அயிர் = நுண்மணல்; அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்றுமணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால் மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.

(வடமொழி வரலாறு. 84.)

ஆர்வம்: தம் நெஞ்சு கருதின பொருள்கள் மேல் தோன்றிய பற்றுள்ளம். (மதுரைக். 489. நச்.)

ஆராய்: ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive) ஆர (நிரம்ப)+ஆய்=ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க.

(ஒப்பியன் மொழிநூல். முன்னுரை.66) ஆராய்ச்சி: ஒரு பொருளை நன்று தீது என்று ஆராய்தல், (தொல். பொருள். 260. பேரா.)

ஆ ரிடை: : அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்கும் உடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின்னெறியுமாய் இருப்பது. (சிலம்பு. 11: 68. அடியார்.)

ஆல்:

ஆல் அல்லது ஆலம் என்னும் சொல்லுக்கு தண்ணீர் என்னும் பொருள் உண்டு என்பதைத் திட்டமாக அறிகிறோம். சில சமயங்களில் மேகத்தில் இருந்து நீர் துளிகள் கட்டி கட்டியாக நிலத்தில் விழுவது உண்டு. இந்த நீர்க்கட்டி களை ஆலங்கட்டி என்று தமிழில் கூறுகிறோம். ஆல், ஆலம் = நீர். ஆலங்கட்டி- நீர்க்கட்டி. கன்னடம். தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆலங்கட்டியை ஆலி என்று கூறுகிறார்கள். தமிழர் ஆலங்கட்டி என்றும், தெலுங்கரும் கன்னடத்தாரும் ஆலிகல் என்றும், மலையாளத்தார் ஆலிப்பழம் என்றும் கூறு கிறார்கள். ஆலங்கட்டியைத் தமிழில் ஆலி என்றுங் கூறுவ துண்டு. மரங்களுக்கு நீர் பாய்ச்ச அமைக்கப்படும் பாத்திக்கு ஆலவால என்று கன்னட மொழியில் பெயர் கூறுகிறார்கள். நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்திக்கும் ஆலாலம் என்னும் பெயர் தமிழில் உண்டு என்பதை அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய இலக்கியச் சொல் அகராதியில் காணலாம். எனவே, ஆலவால,