பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

47

யினவற்றை ஊடறுத்துக் கொண்டும் செல்லுதலின் இப் பெயர்த்து ஆயிற்று. கல்லுங் கரடுமா யிருந்த நிலத்தை வெட்டி யறுத்துத் திருத்தி மக்கள் நடப்பதற்கு ஏற்றதாக்குதலின் வழி யாயிற்று. (தமிழ் விய. 56)

சொற்பொருள் நுண்மை விளக்கம் (ஆன்றவிந்தடங்கிய

சான்றோர்).

(3) வழி ; பலர் நடந்து நடந்து அறுபட்டுப் பண்பட்ட வழி. (திருக்குறள் விரிவுரை. 413.)

(4) நீர் நிறைந்து மண்ணை அறுத்து ஓடுவதைக் கண்டு ஆறு எனப் பெயர் வைத்தது எளியது; நிலத்தில் அறுத்தால் போல் அமைந்த பாதையைக் கண்டு வழி எனப் பெயர் வைத்த தும் எளிதே. ஆயின் ஒருவன் வாழும் வாழ்க்கையின் போக்கை உணர்ந்து அதனை (நல்லவழி என்னும் பொருளில்) நல்ல ஆறு என் எறு வழங்குமிடத்தில் அருமை புலனாகின்றது.

(மு. வ. மொழிவரலாறு. 92.)

ஆறெழுத்துமறை : "ந மோ குமாராய' என்பதாம்.

(முருகு. 186. நச்.)

ஆன்: (பசு) ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம். மா என்று கத்துவது ‘மா' எனப்பட்டது. மா-மான்- மாடு. மா என்பது னகர மெய்யீறு பெற்று ஆவிற்கு இனமான மானை உணர்த் திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப் பெயராய் இருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா (ஆ) ஆதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராயிற்று. ஆ என்பது னகர ஈறு பெற்று ஆன் என்றாயிற்று.

(ஒப்பியன் மொழிநூல். 193.)

ஆன்மா: இத்தொகைப் பெயரில் ‘ஆன்' என்பது கடவுள். து ‘அகன்' அகத்தே அலர்ந்தவன் என்று பொருள்படுவது ஆகும். ‘மா’ என்பது விலங்கு நிலை உயிர். கடவுள் தங்குவத னாலேயே இந்த விலங்கு நிலை உயிராகிய ஐயறிவுயிர் ஆறறிவுயி ராகிய உயர் அறிவுயிர் ஆகி விடுவதனால் அது ஆன்மா எனப்படுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. I. 254)

ஆன்றவிந்தடங்கிய சான்றோர்: நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோர் இடத்துப் பணிந்து, ஐம்புலனும்