பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

61

ஈமம்: ஈமம் என்பது பிணம் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. (புறம். 231. ப. உ)

ஈழம்பூட்சி: ஈழம்பூட்சி என்பது கள் இறக்குவதற்குச் செலுத்த வேண்டிய வரியாகும். (முதற்குலோத்துங்க சோழன். 88.)

ஈழவர்: மக்கள் பற்பல சமயங்களில் தமிழ் நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ் நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். கரிகால் வளவன் ஈழத்தின் மேற்படையெடுத்துப் பன்னீராயிரம் குடிகளைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்து, காவிரிக்குக் கரை கட்டு வித்ததாக அவர் மெய்க்கீர்த்தி கூறும். இங்ஙனம் கொண்டு வரப்பட்டவரும் குடியேறியவருமே ஈழவர் எனப்பட்டனர். மலையாள நாட்டில் இவரைத் தீவார் அல்லது தீயார் என்பர்.

L

(சொல். கட். 27)

ஈற்றா: ஈற்றா என்றது, கடுஞ்சூல் நாகு அன்றிப் பலகால் (திருக்கோ. 382. பேரா)

ஈன்ற ஆவை.