பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

69

உலகம்: (1) உலகம் என்பது பலபொருள் ஒரு சொல்லாய் நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி நிற்கும்.

(முருகு. 1. நச்.)

(2) உலகம் என்றால் மக்கள் மேலும், நிலத்தின் மேலும் ஒழுக்கத்தின் மேலும் நிற்கும் பலபொருள் ஒருசொல்.

(தண்டி. 122. சுப். தே.)

(3) உலகம் = வட்டமாய் இருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது. உலம் வருவோர் (புறம்.51) = சுழல்வோர். உலா - நகரை வலமாகச் சுற்றி வருதல்.

(புறநானுற்றுச் சொற்பொழிவுகள். 349.)

உலகு: உல என்பது வேர்ச் சொல். அதற்கு உருண்டை என்பது பொருள். இவ்வேர்ச் சொல்லினின்றும் பிறக்கும் தமிழ்ச் சொற்கள் உலக்கை, உலம், உலண்டு முதலியனவாகும். ஆதியிற் கற்பாறைக்குக் குழியாகிய உரல்களில் உருண்டைக் கல்லையே உலக்கையாகப் பயன்படுத்தினர் சீவகன் “உலங்கலந்த உயர்ந்த தோளான்” எனத் திருத்தக்கதேவர் குறித்தனர். உருண்டைக் கல்லை ஒத்த தோளான் என்பது இதன் பொருள். உலண்டு என்பது உருண்டை வடிவான ஒருவகைப் புழு. எனவே உருண்டை வடி வானது எனும் பொருளில் தோன்றியது உலகு என்னும் தமிழ்ச் சொல். (வள்ளுவர் வழங்கும் மொழிநூல். வீ. ப. கா. சுந்தரம்.) உலமரலும், அலமரல் போல்வதோர் உரிச் (புறம். 207. ப.உ.)

சொல்.

உலமரல்:

உவமம்: உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொரு ளினை ஒப்புமை கூறுதல். (தொல். பொருள். 276. பேரா.)

உவர்ப்பு: வெறுப்பு; அஃதாவது பொருள்கண்மேற் சென்ற பற்றுள்ளத்தை விடுதல். (சீவக. 2987.நச்.)

உவரி: (1) உவர் + (1) உவர் + இ; உப்புச் சுவையை உடை ய கடலைக் குறித்தது. உலகு சூழ் உவரி (கம்ப. ஊர்தே. 15) என்பதும் காண்க.

(2) உவரி - உவர் நீர் உடை யது. இ

(நாலடி. 146. குறிப்பு.) வினைமுதற் பொருள்

விகுதி.

(திருவிளை. வாதவூரடிகளுக்கு. 2. ந. மு. வே.)

உவா: திண்ணைப் பள்ளியில் விடுமுறைக்கு 'வாவு' என்ற ஒருசொல் வழக்கு உண்டு. பதினைந்து நாட்கு ஒரு முறை - நிறை