பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

பொருளை நாளடைவிற் பெறுவதாயிற்று. ‘ஏரின் உழாஅர் உழவர்” என்ற இடத்தில், ஏர் என்பது கலப்பை என்னும் பொருளில் உள்ளது. “ஏரினும் நன்றால் எது விடுதல்” என்ற விடத்து அஃது அஃது உழுதல் உழுதல் என்னும் பொருளில் அமைந் துள்ளது. "கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்று, இரப்பும் ஓர் ஏர் உடைத்து” என்ற திருக்குறளில், “ஏர்” என்பது அழகு என்னும் பொருளில் காணப்படுகிறது. இவற்றிலிருந்து ஏர்த்தொழில் எத்துணைச் சிறப்புடைத்தாக மதிக்கப்பட்டது என்பது அறியப்படும்.

66

மேலும் ஏர் என்னும் சொல் “எருது” என்னும் பொரு ளிலும் வழங்கப்பட்டிருத்தலைக் காண்கின்றோம். “நல்லேர் நடந்த நசை சால் விளைவயல்” என்ற மதுரைக் காஞ்சியடியில், ஏர் என்பது எருது என்னும் பொருள் உடையது. உழவர் “ஏரோர்” எனப்பட்டனர். நெற்களம் “ஏர்க்களம்” எனப்பட்டது. ஏர்த் தொழிலுக்குத் தொடர்புடைய உரம் எரு" எனப்பட்டது. அது குவிக்கப்பட்டிருந்த பொதுவிடம் “எருமன்றம்" எனப் பட்டது. ஏர்த் தொழில் செய்வதற்கு உதவுவதாலும், எருவினைத் தருவதாலும் ஒரு விலங்கு “எருது” எனப்பட்டது. இக் காரணங் களால் உழுதொழிலைத் தமிழர் சிறப்புடையதாகக் கருதினர் என்பது போதரும். (தமிழ் காட்டும் உலகு. 84.)

ம்

ஏழடி வருதல்: ஏழடி வருதல் ஒரு மரபு; ஏழிசைக்கும் வழிபாடு செய்தானாகக் கருதுதலின். (பொருந. 166. நச்.)

ஏழில்: ஏழில் என்பது, தமிழ் இசைக் கருவிகளில் ஒன்று. அதுபோன்ற தோற்றமுடைமையால் அம்மலை - ஏழில் மலை எனப் பெயர் பெற்றது. வடவர் அம்மலையைச் 'சப்த சைலம்’ என்பர். பிற்காலத்தே அவ்வேழில் மலை - எலிமலை எனத் திரிந்து வழங்கப்பட்டது. அதனால் அவ்வேழில் மலை சூழ்ந்த பகுதியை வடமொழியாளர் மூஷிக நாடு என்றனர்.'மூஷிகம் - எலி.

6

(கொங்குநாடு. 127)

ஏழைமை: நுழைந்த உணர்வினர் அன்றி வரும் வெண்மை. (தொல். பொருள். 274. பேரா.)

ஏறுநடை: அசைவும் தலை எடுப்பும் பொருந்திய நடை.

(திருக். 59. மணக்)