பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ

ஒக்கிடுதல்: ஒக்க + இடுதல். ஒழுங்கு படுத்துதல்; பழுது (செட்டிநாடும் தமிழும். 205.)

பார்த்தல்.

ஒடுக்கல் - அடக்கல்: (ஒடுக்கல் அடக்கல் என்னும்) இரண் டுக்கும் ஒரே பொருளே ஆயினும் தலையாய ஒரு வேறு பாடுளது. ஒருவன் தன்பால் எழும் ஆசையை வேண்டாம் என்று தடுத்துக் கொண்டு அவ்வாறு தடுத்துக் கொள்வதையும் அறிந் திருப்பானானால் அப்பொழுது நிகழ்வது ஒடுக்கல். ஆகவே ஒடுக்கல் என்பது ஒருவன் முயன்று அற நெறி நிற்பது. அடக்கல் என்பது அவன் அறியாமலே நிகழ்வது. (கலைக்களஞ்சியம். 1:42.)

ஒட்டகம்: ஒட்டகம் என்பது அக்கால மரபுப்படி தமிழ்ச் சொல்லாகவே இருத்தல் வேண்டும். ஒருமாதம் வரை பட்டினி இருக்கும் திறம் ஒட்டகத்தின் சிறப்பியல்பாம். ஒட்டப் போடுதல் - பட்டினியிருத்தல். ஆதலால், அத்திறம் பற்றி அதற்கு அப்பெயர் இ டப்பட்டிருக்கலாம். (தமிழ் வரலாறு. 237.)

ஒட்டுப்புதவம்: இரட்டைக் கதவம். (சிலப். 11 : 120. அடியார்)

ஒப்புரவறிதல்: அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல். உலக நடையினை அறிதலாவது உலகம் நடை பெறு வது மக்கள் பலர்கூடி ஒருவர்க் கொருவர் உதவி செய்து வாழ்வதால்தான் என்னும் உண்மையினை அறிதல். அவ் வுண்மை யாங்ஙனம் பெறப்பட்டதோ என்னின், யாம் நாள் தோறும் கண்கூடாகக் கண்டும் கொண்டும் வருதலால் பெறப் பட்டது என்க. என்னை? நாம் உண்ணும் ஊணும், உடுக்கும் உடையும், இருக்கும் இல்லமும், துய்க்கும் இன்பமும் இவற்றின் தொகுப்பாக வாழும் வாழ்க்கையும் நம்மில் ஒவ்வொருவரும் பிறர் உதவியின்றித் தாமே அமைத்துக்கொண்டன ஆகாது, பலர் உதவியும் கூடி அமைந்தவாகலின் என்பது. ஒருவன் உண்ணும் ஒரு பிடி சோறுதானும், உழுவாரும் விதைப்பாரும் அறுப்பாரும் தழிப்பாரும் குவிப்பாரும் காப்பாரும் விற்பாரும் இன்றி அவனுக்கு எய்துமாறு இல்லை. இன்னும் நிலத்தில் விளையும் நெல் இலையிற் சோறாவதற்கு எத்துணை மக்கள் உதவியை