பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

91

அறியும் பொழுது 'உயிர்களுக்கு நன்மைபயக்கும் ஒன்றைச் செய்வதே அறம்' என்று வள்ளுவர் கருதுகின்றார் என்பது மேலும் தெளிவாகின்றது.

அறவோர் உள்ளம் :

இனி,வள்ளுவர் வழியே, அறவோர் உள்ளம் எத்தகையது எனக் காண்போம்:2 அறவோர் உள்ளத்தில் மாசு என்பது சிறிதும் இருக்காது. மதியில் கறைபடிந்தாலும், கதிரில் களங்கம் செறிந்தாலும் அறவோர் நெஞ்சில் மாசு புகாது. மாசு அறவோர் நெஞ்சில் புகுந்தால் அவர் அறவோர் நிலையில் இருந்து கீழே இறங்கி விடுகின்றார். ஆகவே அறவோரின் முதன்மைப்பண்பு மனமாசில்லாமையே!

கறையற்ற உள்ளம் உடைய அறவோரிடம் பொறாமை எழும்புதல் உண்டா? தன்னலம் விஞ்சும் உள்ளத்தில் அல்லவோ பிறர் நலம் கண்டு பொறாமை உண்டாகும்! தன்னலம் என்னும் ஒன்று இல்லாமல் பொதுநலமே பூத்துக் குலுங்கும் அறவோர் உள்ளத்தில் சிறிதும் பொறாமை புக வாய்ப்பு இல்லை.

அளவிலா ஆசை:

பொறாமையையே கண்ணாகவும் காலாகவும் கொண்டு உலாவருவது ஆசை என்னும் பேய்க் குணம். பொறாமை ஒழிந்த அறவோர் உள்ளத்தில் ஆசைக்கு இருப்பே இல்லை.

1.66

'ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தம் ஆமே!”

என்பதை உணர்ந்த அறவோர்களிடம் ஆசை தலைகாட்ட வாய்ப்பே இல்லை.

ஆசைப் பெருக்கம் உடையவர்க்கே ஆசை நிறைவேற்றமும், அதனால் உண்டாகும் இன்பமும், ஆசை நிறைவேறாமையும், அதனால் உண்டாகும் ஏக்கத்துன்பமும் உண்டு. ஆசையே அற்ற இடத்தில் ஏக்கம் இல்லை. ஏக்கம் இல்லாதபோது அதனால் ஏற்படும் கொடுஞ்சொல்லும் இல்லை.

2. குறள்:34

1. திருமந்திரம் : 2615

2.குறள் : 306.