பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

அறவோர் அமைதிப் பணிகள்

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு'

என்பது பொய்யாமொழி.

""

93

தன் துயர் பொறுத்தலும், பிற உயிர்களைத் துன்புறுத்தா திருத்தலும் ஆகிய இரண்டுமே துறவறம். இத்தகைய மாண்புத் துறவோரே அமைதிப் பணிக்கென இறையருளால் தோன்றியவர். அவர் வாழும் காலத்தில், அவர் வாழும் இடத்தில் அறப்பயிர் முளைத்துக் கிளைத்துத் தழைத்து, அரும்பிப் பூத்துக்காய்த்துக் கனியும். அவர் வழியைச் சிக்கெனப் பிடித்து வாழும் பெருமக்கள் தொடர்ந்து வந்தார் எனில் நற்பயன் விளைக்கும். இல்லையேல் அவர்கள் கோட்பாடுகள் ஏட்டளவில் தலைகாட்டி நிற்கும். பிறிதொரு காலத்தே தோன்றும் அறவோர்க்கு வழிகாட்டியாக அமையும்.

பண்பார்ந்த பணி:

அறவோர் தன்மை இன்னதென அறிந்தோம். இனிப் பணி என்பதைப் பற்றிச் சிறிது அறிவோம். பணி என்பது தொண்டு. அது கடமை, கடப்பாடு என்றும் வழங்கப்பெறும். தன்னலந் துறந்த பெருமக்களே பணிபுரிதலில் முனைந்து நிற்கமுடியும். அன்னோரே,

“அன்பர்பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே'

என்று இறைவனிடம் வேண்ட முடியும். தன் பெண்டு, தன் குடும்பம், தன் சுற்றம் என்று வட்டமிடும் உலகவாழ்வில்,

1"எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே"

என்று வேண்டுதல் அரிதினும் அரிது அன்றோ!

பணி செய்தலே தம் பிறவியின் நோக்கம் எனக்கொண்ட ஒரு

பெருமகனார், வேண்டுகிறார் இறைவனிடம்:

2.46

"தன்கடன் அடியேனையும் தாங்குதல்;

என் கடன் பணி செய்து கிடப்பதே”

2.தாயுமானவர், 1. தாயுமானவர்,

2.நாவுக்கரசர்.