பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயச்சால்பு :

6. சமயச் சான்றோர் - I

புத்தர் பெருமான்

உலகியலின் உண்மை நிலைமையை அறிந்து 'உயிர்கள் ஈடேறுதல் வேண்டும்' என்னும் நோக்குடன் தோன்றினவே சமயங்கள் ஆகும். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்று வாழும் வாழ்வு இன்பம் பயப்பது ஆகாதது மட்டுமின்றி மாறாத் துன்பம் தருவதும் ஆகும். பிறவி என்னும் பெருநோயை நீரும் உரமும் இட்டு வளர்த்துச் செழிக்க வைப்பது போன்றதும் ஆகும்" என்னும் கருத்தால் உண்மைப்பொருளை உலகுக்கு உணர்த்த எழுந்தனவே சமயங்கள்.

பிள்ளைப்பெயர்:

சமயங்களைத் தோற்றுவித்த சான்றோர்களும் சரி, அவற்றை வளர்க்க அரும்பாடுபட்ட சான்றோர்களும் சரி, வாழ்ந்து காட்டிய தொண்டர் பெருமக்களும் சரி, அவர்கள் அனைஅமைதிக்கு அரும்பாடுபட்டுள்ளனர். அத்தகைய பெருமக்களுள் ஒருவர் புத்தர் பெருமான். அவர் பிள்ளைப் பெயர் கௌதமர் என்பது. களிப்பிலே கௌதமர்:

கௌதமர் இன்பத்தின் எல்லை என்ன உண்டோ அந்த அளவும் கண்டு வாழ்ந்தார். "உலகவாழ்வை வெறுத்து அரண்மனையை விட்டு வெளியேறி உலகம் போற்றும் துறவியாகக் கூடும்" என்று கௌதமர் பிறந்தபோது அவரைக் கண்ட அசிதமுனிவர் கூறினார். ஆகவே கௌதமருக்குத் துறவு எண்ணம் தோன்றிவிடாதவாறு காக்க விரும்பிய மன்னர் சுத்தோதனர் தம் அரண்மனை வளாகத்தையே இன்பஉலகம் ஆக்கினார். தாம் ளமையில் நுகர்ந்த இன்ப வாழ்வைப் புத்தரே பின்னாளில் உரைக்கிறார்.