பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

127

"வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றார் துயரில் ஆழ்வர். வெற்றியும் தோல்வியும் விரும்பாதவர் நலமும் அமைதியும் பெறுவர்."

"ஆசைக்கு நிகரான அனல்வேறில்லை;

(199)

வெறுப்புக்கு நிகரான நோய்வேறில்லை.'

(200)

"வெகுளியை அறிவால் வெல்லவேண்டும்;

தீமையை நன்மையால் வெல்லவேண்டும்." (221)

"வன்முறையால் தன்செயலை முடிப்பவன் நீதியாளர் ஆகமாட்டான்.” (254)

"முறையான துன்புறுத்தா நெறியால் மற்றவர்களுக்கு வழிகாட்டுவோனே அறத்தைக் காப்பவன், அறிஞன், நீதியாளன்."

(255)

"எங்கெல்லாம் பிறருக்கு இன்னாசெய்யும் எண்ணம் அடக்கப்படுகிறதோ அங்கெல்லாம் துன்பம் தொலைந்து போகிறது." (388)

"தான் ஒருகுற்றமும் செய்யாதிருந்தும் தனக்குக் கிடைக்கும் வசைகளையும் அடிகளையும், சிறைத்தண்டனையையும் பொறுமையுடன் ஏற்றுப் பொறுமையையே தன் ஆற்றலாகவும், வலிமையையே படையாகவும் கொண்டவன் எவனோ அவனே அந்தணன்.” (397)

"நிற்பனவும் திரிவனவும் ஆகிய எவ்வுயிரையும் துன்புறுத் தாமலும், அழிக்காமலும், அழிக்கத் துணை நிற்காமலும் எவன் இருக்கிறானோ அவனே அந்தணன்." (403)

புத்தர் வாழ்வு இணையற்றது. அவர் கூறியவை அனைத்தும் நடைமுறைக்கு ஏற்றவை. அவர், மாந்தர் பின்பற்றுவதற்கு உரிய வற்றையே அமைதியாக எடுத்துரைத்தார். ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார். அவர் பிறந்த நாட்டைப் பார்க்கிலும் பிறநாடுகளில் அவர் கொள்கைகள் மிகப்பரவின. பெருஞ்சமயமாகவும் பிற நாடுகளில் இன்றும் திகழ்கின்றது. அதனை நாம் பெருமையாகக் கொள்ளலாம். அப்பெருந்தகையின் அமைதிச்சமய வழியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளும் நாடு அவர்