பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சமயச் சான்றோர் - III

நபிகள் நாயகம்.

பிறர் துயரம் துடைத்தற்காகப் பிறந்த பெருமக்கள் வாழ்வில் துன்பம் பின்னிப் பிணைந்துதான் நிற்கும் போலும். இல்லையேல், நல்லனவே எண்ணி, நல்லனவே சொல்லி, நல்லனவே செய்த நபிகள் நாயகம் தம் வாழ்வில் சொல்லுதற்கு அரிய அல்லல்களை யெல்லாம் அடைந்திருக்க வேண்டியது இல்லை.

தந்தை, தாய் :

நபிகள் நாயகத்தின் இயற்பெயர் முகம்மது.அவர்கள் தந்தையார் பெயர் அப்துல்லா. அன்னையாரின் பெயர் அமீனா. முகம்மது பிறந்த போதே தந்தையில் முகத்தைக் காணக் கொடுத்து வைக்கவில்லை!

இழப்பில் மேல் இழப்பு :

வாணிகத்திற்காக மக்கமாநகரில் இருந்து சீரியாவிற்குச் சென்றிருந்தார் அப்துல்லா. ஆனால் அவர் மாநகர் திரும்பாமலே 'யத்ரிப்பு' என்னும் இடத்தில் நோயுற்று மாண்டார். அவர் மறைந்த இரண்டு திங்கள் கழித்தே முகம்மது பிறந்தார். ஆறு

ண்டுகள் கடக்கவில்லை. அன்பு மிக்க அன்னை அமீனா அம்மையாரும் இயற்கை எய்தினார். மேலும், இரண்டாண்டுகள் தாம் நகர்ந்தன. பெரும்புகழுக்கும் பெருந்தன்மைக்கும் இருப்பி L டமாக இலங்கியரும், முகம்மது அவர்கட்குத் தாயும் தந்தையுமாக இருந்து பேணி வந்தவருமான பாட்டனார் அப்துல் முத்தலீப் படுத்த படுக்கை ஆனார்! அந்நிலையில், முகம்மதின் பெரிய தந்தையார் அபூதாலிப் பொறுப்பிலே விடுத்துத் தம் விழிகளை மூடினார் பாட்டனார்.

அபூதாலிப் முகம்மதைக் கண்ணின் மணியெனக் காக்கத் தவறவில்லை. ஆனால் அவர் செய்துவந்த வாணிகத்தின் பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது. வறுமையும் நன்கு வட்டமிடத் தொடங்கியது.