பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்கு நூறு :

அறவோர் அமைதிப் பணிகள்

143

இத்தகைய அத்தண்மையாளர் திருத்தலைக்கும் விலை வைக்கப்பட்டது. "முகம்மதின் தலையைக் கொண்டு வருபவனுக்கு நூறு ஒட்டகங்களைப் பரிசாக வழங்குவேன்" என்று ஒருவன் தான் வணங்கும் தெய்வ உருவின் முன் நின்று ஆணையிட்டான்.

உணர்ச்சி மிக்க ஒருவன் வாளுடன் ஓடினான் முகம்மதின் தலையைக் கொய்வதற்கு! பரிசு நூறு ஒட்டகங்கள் அல்லவா! திறமான திருப்பம் :

வெறியின் ஓடும் வழியிலே, அவன் தங்கையும் அவள் கணவனும் நபிகளின் அடியார்களாகி விட்டனர் என்பதைக் கேள்விப்பட்டான். தன் வழியைத் திருப்பி "முகம்மதின் தலையைக் கொய்யுமுன் இவர்கள் இருவர் தலையையும் கொய்வேன் என்று கூறிக்கொண்டு அவர்கள் வீட்டுக்குள் புகுந்தான். மைத்துனனைத் தாக்கினான்; தங்கையை உதைத்தான். அல்லாவின் திருப்பெயரை உரைத்துக்கொண்டு அவர்கள் அஞ்சாமல் நின்ற துணிவு அவனை உலுக்கியது. வெட்டக் கொணர்ந்த வாளை வீசி எறிந்து விட்டுத் தானும் இசுலாத்தில் சேர்ந்து விட்டான்!

எவரெவர் நபிகளைக் கொல்லவும் துன்புறுத்தவும் வந்தார் களோ அவர்கள் அந்தப் பொறுமை மலையின் முன் நின்று அடிபணிந்து சென்றனர்! அண்ணலார் சொல் மழையிலும், முகவொளியிலும் மயங்கி நின்று மனம் திரும்பப் பெற்றனர். இவ்வாறு எதிர்த்து நின்றவர்களே இணைந்து போவது பகைவர்கள் உள்ளத்தில் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது. ஆதலால் சொல்லொணாத் துயரங்களை விளைத்தனர்.

விரும்பிய வெளியேற்றம் :

நபிகள் தம்மைப் பின்பற்றுவோர் படும் துயரத்தைப் பொறுக்கமாட்டாமல் மக்கமா நகரில் இருந்து கப்பலில் ஏறி, அபிசீனியாவிற்குச் செல்ல அவர்களுக்கு ஆணையிட்டார். அவ்வாறு நாடு விட்டுச் செல்பவர்களுக்கும் வாணிகர்கள் உண்டாக்கிய துயரங்களுக்கு அளவில்லை. போகும் போதும் சரி, போயபின்னரும் சரி, ஒழிவில்லாத் துயர் உண்டாக்கிக் கொண்டே இருந்தனர். நபிகளும் ஒரு நாள் மக்காவை விட்டுக் கிளம்பி விட்டார். அவரை அபூபக்கர் என்பவர் நிழல் போல் தொடர்ந்தார். அவர்களைத் தொடர்ந்து பிடித்து விட அரும்பாடு பட்டனர் பகைக் கூட்டத்தார்.