பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

நபிகளும், அபூபக்கரும் ஒரு மலைக் குகையுள் புகுந்தனர். எங்கும் தேடிய எதிரிகள் அம் மலைக்குகையையும் சூழ்ந்து நின்று தேடத் தொடங்கினர். ஆனால் குகையின் வாயிலில் இருந்த ஒரு சிலந்தி வலையைக் கண்ட ஒருவன், "இவ்வலை முகம்மது பிறக்கு முன்னரே பின்னப்பட்டதாக இருக்கும் போலும்" என்று கூறினான். நல்ல வேளையாக அவன் அறிவுரையைக் கேட்ட அருளாளர்கள் உட்புகாமல் தங்கள் ஊர் போய்ப் புகுந்தனர்!

நபிகள் மதீன மாநகரை அடைந்தார். அவரைப் பின்பற்று வோர் அனைவரும் ஒருவர் அறியாமல் ஒருவர் கிளம்பி அங்கு வந்து சேர்ந்தனர். அவ்வளவு தான். நபிகள் பகை, நாட்டுப் பகையாக வளர்ந்து விட்டது. மக்கமாநகரார் மதீனா நகர் மீது படை எடுத்தனர். அல்லாவின் பெயரால் நபிகளின் தலைமையில் இசுலாமியர் மக்கமா நகரைத் தாக்க முனைந்தனர்; வெற்றியும் எய்தினர்.

நல்ல தண்டனை :

போரிலே பலர் சிறைப் பிடிக்கப்பட்டனர். அவர்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்று சிலர் கருதினர். ஆனால் நபிகள் சிறைப்பட்டோர் நிலைமைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கினார். அடி, உதை, வெட்டு, கொலை ஆகிய தண்டனை தர அருளாளராய அவர் இசையவில்லை. கல்வி அறிவுடைய கைதிக்கு என்ன தண்டனை தெரியுமா? அவன், கல்வியறி வில்லாத பத்துப் பேர் களுக்குக் கல்வி அறிவூட்ட வேண்டும்! அதுவே அவனுக்குள்ள தண்டனை!

நபிகள் மேல் வசைக்கவி பாடிய ஒரு கவிஞன் கைதியாக இருந்தான். அவன் பல்லை உடைத்துப் பாடம் புகட்ட வேண்டும் என்பது ஒருவர் வேண்டுதல். நபிகளோ, “இவரது எவ்வுறுப்பைச் சிதைத்தாலும் சரி, இறைவன் என்னுடைய உறுப்பையும் சிதைக்கத் தவறான்" என்று கூறி விடுதலை அருளினார். இவ்வாறே அவர் செய்த பிற போர்களில் அகப்பட்ட கைதிகள் மீதும் அருள் செய்தார். தம்மையும், கஃபாவையும் அடைக்கல மாக அடைந் தவர்களைப் பேரருளுடன் நடத்தினார். "பிறர்மீது அன்பும் இரக்கமும் காட்டாதவன் இறைவனுடைய அன்பையும் இரக்கத்தையும் பெறுதற்கு உரிமை யற்றவன்" என்பது அவர்தம் திருவாய் மொழி