பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அறுவை முதலிய மருத்துவப் பணிகளை அயராமல் இராப் பகலாகச் செய்தார் சுவைட்சர்; அதற்கும் அவர் மனைவியார் துணைபுரிந்தார். நாடு கடந்து சென்று எப்பயனையும் எதிர் பாராமல் தொண்டில் ஈடுபட்டவர் சுவைட்சர். அவர்மட்டுமோ ஈடுபட்டார்? தம் குடும்பத்தையே ஈடுபடுத்தி வாழ்நாள் முழுமையும் தொண்டு செய்தார். அவர்பணி வாழ்க! அவர் புகழ் பெருக!

தமியான் தனிநெறி:

பெல்சிய நாட்டிலே பிறந்தார் தமியான் அடிகள். அவர் கிறித்தவ சமயத்தைப் போதிப்பதற்காகவே ஆப்பிரிக்காவிற்குச் சென்றார்.ஆனால் அறிவு மருத்துவராகப்போன அவர் விரைவில் உடல் மருத்துவராக மாறினார்.

காலும் கையும் விரலும் அழுகி ஒழுகும் தொழு நோயாளரைக் கண்டார்; உருகினார்; அவர்க்குத் தொண்டு செய்யவே தம்மை ஒப்படைத்தார். நினைக்கவே அருவருப்பு உண்டாக்கும் தொழுநோயாளரிடம் இன்புற உறவாடினார்; அளவளாவிப் பேசினார்; அவர்கள் புண்ணைக் கழுவினார்; மருந்து கட்டினார்!

பிறர் பிணி நீக்கிய பெருமான், அவர்கள் பிணி நீக்கும் பணியிலே தமக்கு அத்தொழுநோய் பற்றிக்கொண்டதைக் கூட அறியாமல், அறிந்த பின்னரும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் புன்முறுவலுடன் தொண்டு செய்தார். ஆயிரம் ஆயிரம் பேர்கள் பிணியைப் போக்கிய அப்பெருமான் நாற்பத்திரண்டாம் அகவையில் தம் வாழ்வை அமைதியாக முடித்துக் கொண்டார். பொன்னையும் பொருளையும் கொடுக்கலாம்! தன்னைக் கொடுப்பதன்றோ அரிய கொடை!

நைட்டிங்கேல் நன்னெறி:

ஒருநாள் செய்தித் தாள்களில் “அருள் உள்ளம் படைத்தோர் இலரா? பிணியால் மடிவோரைப் பேணுதற்குரிய பெண்மணிகள் இலரா?" என்னும் அறிக்கை வெளிவந்ததைக் கண்டார் ஓர் இளஞ்செல்வி. அப்பணிக்குத் தம்மை ஒப்படைத்தார். அவரே பிளாரன்சு நைட்டிங்கேல்.

போரால் இறந்து பட்டவர்களைப் பார்க்கிலும் தக்க மருத்துவ வாய்ப்பு இல்லமையால் 'ஸ்குட்டாரி' என்னும் இடத்தில் இறந்த வீரர் பலர். அங்குத் தொண்டு செய்தற்கே நைட்டிங் கேல்