பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்றுலா

உலகமே சுற்றுலாக் காட்சியும் மாட்சியும் உடைய இயற்கை இயங்கியலே! உலா, உலாவுதல் - சுற்றுதல்! சுழலும் இயற்கை! உலகம் சுழலுதல் தெரியாமல் சுழன்று கொண்டே இருக்கும்! சுழன்று கொண்டே சுழலாமல் இருக்கும் விந்தை பெருவிந்தையே அல்லவோ!

ஊரும் சுற்றுலா, நாடும் சுற்றுலா, உலகும் சுற்றுலா, வியனுலகும் சுற்றுலா!

அது சிறிதானால் என்ன? பெரிதானால் என்ன?

“சந்தனக் கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகிவிடுமா?" என்பது குறுமை நெடுமை எழுத்துகளுக்கு இலக்கணர் காட்டும்

உவமை!

சுற்றுலா சிறிதானாலும் பெரிதானாலும் அதன் பயன்பாடு பயன்படுத்துவாரைப் பொறுத்ததேயாம்!

தொடர் வண்டியேறிச் செல்பவர் போனவுடன் பார்க்கத்தக்க பகற்பொழுதிலேயே படுக்கையராகி விட்டால் பயன்?

அவர் அமைதியாக வீட்டிலேயே படுத்திருக்கலாமே! செலவாவது மீதமாமே! பார்க்க வேண்டும் எக்காட்சிபற்றியும் கவலைப்படாமல் சீட்டுக்கட்டு எடுத்து அதனைப் பிரித்துப் போட்டு அரட்டையடிப்பார்க்கு அவரவர் ஊரில் மடங்களா இல்லை! வேறு இடங்களா இல்லை!

ஓயாப்பேச்சு -ஒழியாப் பேச்சு - பேசியே பொழுதைத் தீர்ப்பார், செல்லும் செலவு வழியே என்ன காண்பார்?

,

'நான் படிக்கிறேன்' என்று புத்தகத்திலேயே புதைந்து விடுவார், சுற்றுலா வந்த பயனை எய்துவரா?

சுற்றுலாப்பயன் காணும் காட்சி, கருதும் கருத்து, கேட்டறியும் கேள்வி, ஆங்காங்குக் கிடைக்கும் விளக்கம், சான்று பொருள்

-