பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

177

வெங்காலூர் (பெங்களூரு) நகர் சென்ற வண்டி, மீண்டும் பெங்களூரு கிழக்குவரை வந்து புனே தடத்திற்கு மாறுகிறது!

தொடரியில் இருந்து கொண்டு இருபாலும் இயற்கையை நோக்குகிறேன்: மேற்கு மலையின் கிழக்குப் பகுதிச் செலவு அது. கருநாடகம் ஆந்திரம் மராத்தியம் எனச் செல்கிறது.

அண்மையில் மழை இல்லை, மலை காடுகளிலும் பசுமை இல்லை; மலைவடிவு இடங்களிலும் நீர் இல்லை. மேடு, பள்ளம், கருமை, செம்மை, நெடும்பாறை, வெடிப்பு எனத் தோன்றுகின்றன.

மாந்தர் முயற்சியின் ஏற்ம் ஆங்காங்கே பசுமைக் கோலம் காட்டுகின்றது! நெல்வயல்-தோட்டப் பயிர்-கோதுமைப்பரப்பு எல்லாம் ஊடே ஊடே தோன்றி உழைப்பின் மாண்பை உரைக்கின்றன.

பார்க்கும் பார்வை கலையொடு கலந்தால் பட்ட மரமென்ன பசுமை மர மென்ன?

மன்னனாக வந்தவன் தானா நடிப்பால் கொள்ளை

கொள்வான்?

இரவலனாகக் கையேந்தி நிற்பவனும் நடிப்போடு ஒன்றி விடுதலால் நம்மோடு ஒன்றிக் கைதட்ட வைத்து விடுகிறானே?

இலை உதிர்ந்த மரம் தான் அழகில்லையா? வற்றல் மரம் வள்ளுவர்க்கு எக்காட்சியாயது! அணிலின் துள்ளலும் ஓட்டமும் ஒலியும் நம்மைக் கவராமல் இல்லையே!

செல்லச் செல்லச், சொல்லி வைத்தவர் எவர்?

"மரங்களே நெட்டையாகாதீர்கள்! குட்டையே எழில்! நெட்டை வீழ்ந்தாலும் நீர்வீழமாட்டீர்” என்று வளராமல் தடுத்து வைப்பது எது?

பெருநெடும் பரப்பில் நெடி துயர்ந்து பரந்து படர்ந்த பாரிய மரங்களைப் பார்க்க முடியவில்லையே!

மண்ணுக்குத் தகவே மரம்! கண்ணுக்குத் தகவே காட்சி!

பகலில் காணும் கண், இரவும் காணமுடிந்தால்?

‘பளிச்சு பளிச்சு’ ‘மினுக்கு மினுக்கு' என ஒளியைக் காணலாம்!

வேறென்ன காணமுடியும்?