பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நெல்லையில் நிகழ்ந்தது (1934). அம்மாநாட்டுத் தலைமை ஏற்ற புரவலர் த.வே. உமாமகேசுவரனார் உசுமானியாப் பல்கலைக் கழகப் பேரவையில் அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் நவாபு மாடியார் சங்கு பகதூர் 8.02.1934 இல் நிகழ்த்திய பேருரையைத் தமிழ் நாட்டுத் தலைவர்கள் பல்காலும் படித்துத் தெளிய வேண்டும் என வலியுறுத்தினார்.

"எங்கள் மொழித்திறனில் முழு நம்பிக்கை வைத்தோம்'. புதுக் கலைகளின் கருத்தை உணர்த்த அயல்நாட்டு மொழியே இன்றியமையாத கருவி என்றும் தாய்மொழி இதற்கு ஏலாத கருவி என்றும் கொண்டிருந்த பழங்கொள்கையால் இந்தியர்கள் பழிக்கு ஆளானதும் அன்றிக் கீழ்நிலையும் எய்தினர் எனக்கண்டோம்.

வேற்று மொழியைக் கற்றுப் புலமை பெறவும் அதன் வாயிலாய்க் கலையறிவு பெறவும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளால் இக்கொள்கைக்கு அடிமையாகிறோம் என்பதை உணர்ந்தோம். வேற்று மொழியால் அன்றிக் கலையறிவும் உயர்நிலையும் எய்த ஒண்ணாது என்ற அடிமை எண்ணத்தினால் நுண்மதி மழுங்கி ஆயும் திறன் அழிந்து பாடப் புத்தகங்களை உருவேற்றி ஒப்புவிக்கும் கருவிகளாயினோம் எனத் தெளிந்தோம்.

தாய்மொழி தாழ்ந்த தரத்தது. கலைக்கருத்துக்களைத் தன்னகப் படுத்தவோ பிறர் உணருமாறு கூறவோ முடியாதது என்ற எண்ணங்கள் மனிதனின் ஆய்புலத்தையும் தன் முயற்சியையும் மழுங்கச் செய்யும் மனநிலையை விளைத்து விட்டன. தாய்மொழி இழிதகவுடைய தெனும் கொள்கையை மறுக்கத் துணிந்தவர் சென்ற ஒரு நூற்றாண்டாக வெளி வரவில்லை.

இந்திய மக்கள் கல்வியில் தேர்ச்சியடைவதற்கு ஆங்கிலமே ஏற்ற கருவியென மெக்காலே துரைமகனார் அறிக்கைவிடுத்த காலம் தொட்டு அனைவர்க்கும் தாய்மொழியின் நம்பிக்கை ஒழிந்துவிட்டது. எமது தாய் மொழியில் கல்வி வழங்குவம் எனப் பல்கலைக்கழகம் கூறிய ஞான்று பல்வகைத்தான எதிர்ப்புகள் இங்குத்தோன்றின. சிசுக்கொலை புரிவோர் சிலர் கழகத்தின் கழுத்தை உடனே முரித்துவிட எண்ணினர். சிலர் சொல்வளம் நிரம்பாத இந்துத்தானி மொழி புதுக்கருத்துகளைக் கூறமுடியாது

க்