பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

195

பார்ப்பினும் ஈர்த்து நிறுத்துவது! அவ் வேலையொடும் ஒப்பிடும் சிற்பச் சீர்மையா, அசந்தா எல்லோராச் சிற்பங்கள் எனக் கணித்து விட முடியாமல் இருப்பதற்கு ஒரே ஒரு சிறப்பென்ன? அனைத்தும் குடைவரைச் சிற்பங்களும்: வண்ணங்களும் ஓரரசன் காலப் பணி அன்றி வழிவழித் தொடர்ந்த பணியால் அன்றி முடியாச் சிறப்பினது என்பதே.

ஔரங்கா பாத்தும் குடைவரைச் சிற்பங்களை உடையதே! ஒளரங்கசீப் மனவிை நினைவில் எழுந்த பீபிகா மால் தாசுமாலின் தோற்றத்தை அப்படியே படியெடுத்து வைத்தாற் போன்ற அமைப்பும் எழிலும் கொண்டதுவே! பாரித்த இடப்பரப்பில் புல்வெளி பூங்கா அடுக்குதளம் எனச் சிறப்புகள் பல கொண்டதுவே! ஒளரங்காபாத்தின் பழம் பெயர் 'கிட்கி' (Khidki).

எல்லோராவைப் பார்த்து ஔரங்கா பாத்தையும் பார்த்து மேலே நாசிக்கும் சேர இரவு பத்து மணியாயிற்று! முந்நூறும் முந்நூறும் ஆக அறு நூறுகல் தொலைவாயிற்றே!

விடியல் தொடங்கிய செலவு - இடைவிடாச் சுற்று-அயர்வின் உச்சம் -ஆனால் பழகிப் போன எண்ண ஓட்டம் இரவில் கண்ணுறக் கத்தைக் கடியவே செய்தது.

கண்ட காட்சிகள் படக் காட்சி போல் சுழல்கின்றன! அச்சுழற்சிப்பதிவு எழுத்தாகின்றது.

காந்தத்துக்கு உயிர் இல்லை, உணர்வும் இல்லை!

எனினும் ஈர்ப்பாற்றல் உடையதாய் வடதிசையே காட்டும்!

அதன் திசைகாட்டல் அறிந்தே திசைதவறுவார் திசையை நேராக்கிக் கொள்ளவும் திசையில் தவறாது செல்வார் தெளிவுடன் தொடரவும் உதவும்.

அறிவுடையானுக்கும் அவ்வறிவிலாக்கருவி அறிவுறுத்தும் பேறு பெற்றுவிடுகிறது. அதனைப் பாராட்டும் நாம், அக்கருவி இயக்கத்தைக் கண்டு உலகுக்குத் தந்தானே அவனை மறக்க முடியுமா? அவன் இல்லையேல் அக்கருவியின் வரவு ஏது? தரவு தான் ஏது? குறி ஒன்று வேண்டும். அக்குறி தெளிவின தாகவும் திட்டமானதாகவும் இருக்க வேண்டும். அக்குறியோ தெளிவு திறங்களோ அடையும் பயன் என்ன? பெருமை என்ன?