பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

203

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு’

என்னும் அரசுக் குரிய நால்வகைக் கடமைகளையும் தம் தலைமேல் அள்ளிப் போட்டுக கொண்டு உலகநலம் என்னும் ஒன்றே கருதி நாளெல்லாம் தொய்வு இடையீடு என்பவை இன்றிக் கடமை புரிந்த பெருமக்களாலேயே காலமெல்லாம் உலகம் கண்டுகளிக்கும் காட்சிச் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன!

வீட்டு நலம் கருதிய பொருள் தொகுப்பினும் நாட்டு நலம் உலகநலம் கருதிய கனிம வளத்தொகுப்பு அன்ன தொகுப்புச் செய்து, அதனை முறைப்படுத்திக் காத்துவரும்சீர்மை இல்லாக் கால் உலகம் எத்தனை எத்தனையோ தனக்குரிய வளங்களை அறியக் கூடாமல் மறந்தும் துறந்தும் போயிருக்கும்! இத்தகைய தொகுப்புகள், தொகுப்பு உணர்வாளர்களை மேலும் தூண்டித் துலக்க வல்லன.

தொகுப்புணர்வு என்னும் ஒன்று மாந்தனுக்கு இல்லையேல் சங்கத் தொகை நூல் என ஒரு பொற்பேழை நாம் காணக் கூடியதாக ன்றும் இருக்கின்ற தென்றால் அன்று தொகுத்து வைத்த தொகையாளன் கொடை எனப் போற்றி மேலும் பாதுகாத்துப் பொலிவூட்ட வேண்டும்!

ஓலைச் சுவடி, நூற்சுவடி, ஓவியம், நாணயம், கவின்கலைப் பொருள்கள், மண்வளப் பொருள், பெருமக்கள் பயன்படுத்திய வரலாற்றுச் சிறப்புடைய பொருள்கள், அரும் பொருள்கள், இயற்கைக் கொடைகள் எனத் தொகுத்துக் காட்சிக்கு வைத்தோர் உலகுக்காக வாழ்ந்தோர் என்னும் பேற்றுக்கு உரியர் என நாடு அறியும் போது தான் நம் பழஞ்செல்வங்கள் பாதுகாக்கப்படும்.

பழஞ்செல்வங்களை எவர் மதிப்பார்? அதன் அருமையும் பயனும் உணர்ந்தவர் மதிப்பார்! மற்றையாரும் அழிவினை யாளரும் பதினெட்டாம் பெருக்கிலும் அவியிலும் போட்டு அழிப்பர்; குப்பை கூளம் எனப் 'போகி' நாள் என்னும் போலி நாளில் கழிப்பர்! கனிமவளக் காட்சியகம் கண்டாரைக் கட்டாயம் சிந்திக்க வைக்கும். தொகுத்துக் காக்கும் ஆர்வத்தைத் தூண்டும்! அடுத்த நாள் மறந்து போகும் தேரோட்டத் தெருக்காட்சி அமைப்பன்று அஃதாம்! மேலே காணும் காட்சியகங்களுக்கும் இச்சிந்தனை பொருந்தும்!