பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

என்னும் கட்டடமும் உள்ளன. இராசபுத்திர மன்னர்களின் கட்டக்கலை வண்ண ஓவியக் கலை ஆயவற்றுக்கு எடுத்துக் காட்டாக அமைந்தவை இவை.

மணிக்கலா என்பதொரு பூங்கா! மலையடிவாரம் - ஏரிநீர்ப் பரப்பு இடையே திட்டையில் அமைந்த பூங்கா! விரிவுடையது; ஏற்றம் இறக்கம் உடையது.

மலை மேல் மாளிகைகள் உள்ளன. இயற்கை அரணங் களைக் கொண்டவை. சச்சன் மாளிகை என்பது ஒன்று.

பட்டுப்போன ஒரு மரம்! அதன் இயற்கையோடு இயைந்த செயற்கை பூங்காவுக்கு வருவாரை வரவேற்கும் வரவேற்பாளிப் பெருமையை அடைகின்றது!

பறவைகள் தங்குவதற்குத் தக்க தாங்கிகள் தீனிவைக்கும் தட்டங்கள் நீர்த் தொட்டிகள் உள்ளமை ஓர் ஆன்ம நேயன் செயற்பாட்டை உலகுக்கு அறிவிப்பவையாக உள்ளன.

"ஓயிட் சிற்றி"

“சின் சிற்றி”

சண்டர் சிற்றி

லேக் சிற்றி

முதலியனவும் உதயபூர்க்குரிய பெயர்களாம்!

கலைவளம்கொழிக்கும் ஊரில் கலைத் தொழிற் கூடங்களும், கலைப்பொருள் விற்பனைக் கூடங்களும் மல்கிக் கிடக்கும் அல்லவோ! எங்கு நோக்கினும் கலைத் தொழிலகங் களும், கலைக் கூடங்களுமே தோன்றுகின்றன. வழிக்கடைகள், வாயிற்கடைகள் என்பவை மிகப்பல.

வழிகாட்டுகிறேன் என வந்து மறிப்பார், தடுப்பார், முன்னிழுப்பார் இத்தொழில் கலை வளத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பொருட்காட்சி; சிற்பக் காட்சி; காட்சிச்சாலை எனப் பெயர்கள் இருக்கும், மற்றை இடங்களைப் போல அரசு அமைத்த காட்சியகங்களை இவை என எண்ணிப் புகுந்தால் அவையெல்லாம் வணிக நிலையங்கள்! வழிகாட்டிகளுக்கு விற்பனைப் பங்களிப்புடைய நிலையங்கள்!