பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

209

கண்ட பின்னர்த்தானே வணிக உத்தியும் நமக்குப் புலப்படு கின்றன.

மெய்யாகவே அரசின் காட்சிக் கூடம் சிற்பக் கூடம் கோட்டைக்குள் விரிவு விரிவுப் பகுதிகளோடு உள்ளன. ஆனால் அவற்றின் முகப்பின் வாயிலாகத் தோன்றுமாறு அமைத்த தனியார் வணிகக் காட்சிக் கலைக்கூடங்கள் உண்டு! அங்கே உள்ள கூட்டம், அரசுக் கலைக் கூடப்பகுதியில் இல்லை! ஏன் வழிமறிக்கும் வழிகாட்டி வலையில் தப்பினால்தானே!

அரசின் அரிய கூடத்தில் ஆளரவம் இல்லாமல் அமைவாகப் பார்க்க முடிந்தது. வழக்கம் போல் ஆட்சிபுரிந்தவர், புத்தர் அருகர் சிலைகள், அரியபொருள்கள்! அங்கிருந்து ஏரிக்குள் அமைந்த மாளிகைகளைக் காண அவ்வளவு எழிலாகின்றது. இராணா சச்சன் ஆட்சிக் காலத்தில் போர்மூட்டம் கப்பிக் கொண்ட சூழலில் ஆயா பன்னா என்பாளிடம் தன்மகன் உதயசிங்கை ஒப்படைக்க அவள் வளர்ந்துவந்தாள். ஆனால் அரசகுமரன் அவள் வளர்ப்பில் இருப்பதாக அறிந்து பகைவர்கள் அவளைச் சூழ அவள் தன்குமரனையே அரச குமரன் எனக் கூறித் தப்புவித்தான் என்னும் வரலாறு காணப்படுகின்றது.

மற்றவர் பிள்ளையைக் காக்கத் தான் பெற்ற பிள்ளையைப் பலியாக்கும் தாய்மை அரிதில் அரிதாம்! அவ்வருமை, நாடு காத்தல் என்னும் நல்லெண்ணத்தில் முகிழ்க்கும் வீறுமிக்கதாம்! களமனுப்பிய மூதில்மகளிர் காட்சி என்ன, இந்நாள் ஈழத்தாய்மார் தம் இறையாண்மைகாக்கக் களமேக ஏவும் விடுதலை வீறு என்ன குறைவுடையதா! ஒருபன்னாவைப் போல் பல்லாயிரம் தாய்மார் அல்லவோ ஈழமண்ணுக்காக ன்னுயிர் மக்களை ஈகம்

புரிகின்றனர்.

காட்சியகத்தே ஒருபடம்! குதிரை பன்றி யானை புலி என இடமாறி நின்று பார்க்கப் பார்க்கத் தோன்றும் தோற்றம்!

பொருட்காட்சியைக் கண்டு வெளியே வரும் போது குதிரை கட்டு மிடம் இருந்தது. அங்கே எடுப்பு மிக்க குதிரைகள் ஐந்தாறு கட்டப்பட்டிருந்தன. அவை காலைத் தட்டித் தாளம் போட்டன. ஏன் என நோக்கினோம்!

அவற்றின் தட்டு முடிந்ததும் உணவு தரப்படுகின்றது; ஒரு மொத்தமாக இல்லை! சிறிது சிறிதாக!