பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

காலைத் தட்டித் தட்டிக் கேட்டால் தான் உணவு கிடைக்கும் என்னும் வழக்கத்தில் அவை உள்ளமை புலப்பட்டது.

அமெரிக்காவில் சுறா மீன் நீர்வளாகத்தில் பயிற்சியாளர் கையசைவு உடலசைவுக்குத்தக அவை நீருள்ளும் நீர்மேலேயும் நீர்க்கரையிலும் ஆடி ஓடிப் புரண்டு துள்ளி எழுந்த நிலையும் உணவு வழங்கிய நிலையும் போல் இருந்தது.

உணவின் தேட்டமும் சுவையும் அடிமைப்படுத்தி வைக்கும் இயற்கையை எண்ண வைத்தது. மக்கள் நிலையரிலும் அத்தகையர் இல்லாமல் இல்லையே!

உதயபூரில் இருந்து நாங்கள் சோத்பூர் சென்று தங்குதல் வேண்டும். பக்கம் பக்கமா உதயபூரும் சோத்பூரும்? குறைந்தது ஆறு மணிப் பொழுது வேண்டும்!

செல்லும் போது சாலை சார் விடுதி ஒன்றில் 2 மணியளவில் புகுந்தோம். எல்லாம் தேநீர் - மாச்சில் தீனர்கள் - இளைஞர்கள்! பொழுதும் கடக்கிறது, ஏதாவது உண்டாக வேண்டும்! உணவு கேட்டோம் சரி என்றவர் இலையோ தட்டோ வைத்திலர். அரிசியை ஒருவர் எடுத்தது கண்டேன்! ஆ! ஆ! ஆக்கி வடிக்கும் வரை காத்துக் கிடக்க வேண்டியது தான் என எண்ணினேன்.

ஆக்கித்தான் உணவு வரும் என்றேன்! இல்லை! உணவில்லாமல் இராது என்றார் வேலாயுதர்! எண்ணியபடியே வெந்தும் வேகாத நிலையில் அரைமணிப்பொழுதின் பின் உணவு வந்தது! காத்திருத்தல் தோன்றாதிருக்கத்துணைப் பொருள்கள் ஊடே வந்து தலை

காட்டின!

எனக்கு உணவைப் பார்க்கிலும் தனிப்பாடல் ஒன்றன் சுவை ஏறி நின்றது.

நாகப்பட்டினத்தில் ஒருசத்திரம்; அதற்குரியவன் பெயர் காத்தான்! வருபவர்காக்காமல் உண்ண முடியுமா?

பெருங்குடல் சிறுகுடலைத் தின்ன ஒருபுலவன் காத்தான் சத்திரத்திற்கு வந்தான்! பாவாணர் சொல்வது போல் ஈரத்துணியை இடுப்பில் சுற்றிக் கொள்ளப் பழகாதவன் போலுள்ளான் பாவலன்! அவன் பசியை மீறி அவனுக்கு ஒரு பாட்டுக் கிளம்பியது!