பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

215

கோட்டை அடிவார வீடுகளுக்கு ஒருதனிச்சிறப்பு: வீட்டு மனை வாங்கலாம்: வீடுகட்டலாம்: குடியிருக்கலாம்: விலைப்பதிவு இல்லை: வீட்டை எவருக்கும் மாற்றி விற்கவும் முடியாது! ஆனாலும் அவ்விடத்தில் கட்டடங்களுக்குக் குறைவு இல்லை: விலைதரு தலிலும் குறைவில்லை! இருபது முப்பது இலக்கங்கள் ஒவ்வொரு வீடும்!

கோட்டை அரண்மனை அரசு என்று இருந்ததால் அவ்வளவு விரிவு உயரம் உடையதாக உள்ளது. உச்சிவரை இராசபுத்தானத்துக் கென்ற சிறப்புடைய சிவப்புக்கல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இயல்பான எளிய வீடுகளும் சுற்றுச் சுவரும் கூட அக்கற்களால் கட்டப்பட்டவையே! அக்கல் இங்கே வந்து விட்டால் யானை விலை! குதிரை விலை!

நடைபாதை, படிக்கட்டு - பெரிய ஏற்றம் இறக்கம் இல்லாமல் உயர் தளமாகிச் செல்கிறது! அரண்மனை அலுவலகங்கள் காவலர் குடியிருப்புகள் அங்காடிகள் கோயில்கள் என்பன நிரம்ப உள்ளன. தொல்காப்பியம் கூறும் ஏவரணம் ஏறுதளங்களில் உள்ளன. கீழே வருவாரை அம்பேவித்தாக்கலாம். அவர்க்கோ எதிர்த்தாக்குதல் தாக்க இயலாது. வீரர் இருந்து நேரேயும் பக்கவாட்டிலும் அம்பு தொடுக்கத் தக்கவாறு துளைகள் உள்ளன.

“ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்”

என்பதும் சிலப்பதிகாரத்து வரும் கோட்டை வகுப்பும் நினைவில் எழுந்தன.

கீழே ஏரி ஒன்று விரிந்து கிடப்பதில் படகுகள் உலாவுகின்றன. படகுத்துறையாக உள்ளது.

கோட்டையில் புதுமணம் ஒன்று நிகழ்ந்து மணமக்கள், உறவு சூழ வருகின்றனர்! மணமகன் எடுத்தவாள் கையோடு நடையிடுகிறான்! மனைவி தூக்குக் குவளையுடன் தொடர்கிறாள்! சீர்வரிசை ஊர்வலம் எங்கும் இல்லாமல் இல்லை!

அங்கங்கே பேரியங்கிகள் அவற்றைத் தாங்கிய உருளை வண்டிகள்! கோயிலில் அவரவர் வழிபடலாம்! பூ நீர்படைக்கலாம்! தமிழ்நாட்டில் தானே தன்னலப் பெருவாயால், பொதுநலம் பெரிது விழுங்கப்பட்டு, வள்ளுவர் சொன்னது போல்,