பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

"அண்ணாத்தல் செய்யாமல்”

கிடக்கின்றது!

சோத்பூர் பல்கலைக் கழகம் சிறப்புமிக்கது சுற்றுலா மையங்கள் என்றால் காட்சிக் வடம் விற்பனைக் கூடம் குறையுமா?

நண்பகல் உணவுக்குப் போனோம்! தாமோதரனார் இராசபுத்தான உணவு வகையைச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுத்த விடுதிக்கு அழைத்துச் சென்றார்!

தட்டம் போட்டனர்; பெரிய தட்டு அதைச்சுற்றிலும் சிறுதட்டுகள் ஒரேகையில் கொண்டு வந்து வைத்து விடுதல் பெரும் பெரும் விடுதி வழக்கம் இல்லையா?

-

-

அங்கே நாங்கள் கண்ட உண்ட விடுதியின் முறையே வேறாக இருந்தது; மொத்தமாகக் குவியாமல் மொத்தமாகக் கொண்டு வராமல் ஒன்று ஒன்றாகச் சிறுகச் சிறுக வேண்டுவ வேண்டுவ வேண்டுமளவு உண்ண வைத்த அருமை பாராட்டுக்கு உரியது. அறியாமலே சுவைத்துச் சுவைத்து உண்ணவும் அளவு பெருகவும் வாய்த்து விடுகின்றது.

சோறு தொடுகறிவகை சப்பாத்தி எனவே கண்ட நாம், இனிப்பு காரம் சுடக்கூடக் கேட்டுப்படைப்பது தனிச் சுவையாகிறது. நிறைவில் பழவகை - குளிர்பொருள் என வழங்கல்!

கைகழுவப் போக வேண்டிய தில்லை என்றார் தாமோதரர். கரண்டி முள் கொண்டு உண்ண வில்லையே! கையைக் கழுவாமல்....

நீர்க்கெண்டி தட்டத்தோடு வழங்குநர் வருகிறார். கையை தட்டத்தின் மேல் வைக்கச் சொல்லி நீர் விடுகிறார்! துடைக்கக் துணியோடு நிற்கிறார்! அவ்வூர்ச் சிறப்பு அஃதாம்!

ஓர் உணவுக்கு எவ்வளவு என்று தாமோதரிடம் கேட்டேன். அவர் பற்றுச் சீட்டைப் பார்த்து உருபா நூற்று முப்பது என்றார். உணவு வகைகளை ஓரளவால் எண்ணினேன் முப்பது வகைகளைத் தாண்டின!

வள்ளல் அழகப்பர் மகளார் திருமணத்தின் விருந்தில் அறுபத்து நான்கு வகைப் பொருள்களாம்! அதில்எவ்விலைக்கும் ஒன்றும் குறையாமல் எண்ணுதற்கு ஆள்களாம்! ஊண்சுவை உலகாட்சி கொள்ளத் தவறவில்லையே!