பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

“அறவிலை வணிகன் ஆயலன்'

என்பது! மோசி கீரனார் பாடிய பாடல் தொடர்!

“மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று”

221

என்பது வள்ளுவம்! மனித நோக்கு எப்படியாவது தெய்வ அருளுக்கு இலக்காகி விட வேண்டும்! வழுவாய்களுக்குக் கழுவாய் தேடிவிட வேண்டும் என்பது!

பாலைவனப் பகுதி வரவரப் பெருகிறது! குறுமுள்மரம், கள்ளி, கற்றாளை, வன்னி, வேல மரங்கள் என்பவையும், மணல் திரடுகளும் ஒட்டகம் சாலையோரச் சிறு சிறு குடியிருப்புகள் என்பவையுமே காணப்பட்டன.

இராசபுத்தானத்தாரில் ஆடவர் தலையெல்லாம் ஒரு கூடை போலத் தலைப்பாகை இருப்பது ஏன் என்பது காலை 9 மணி அளவிலேயே புலப்பட்டது. இரவோ வாட்டும் குளிர்! பகலோ விடிந்து கதிர் வெளிப்பட்டது தொட்டே வதைக்கும் சூடு! உச்சிக்கு ஏற ஏறச் சுட்டெரிக்கும் அனல்! வியர்வை கொட்டல் அறியாரும் குளித்தார் போல நீரராகக் காட்சி தராமல் முடியாது! செந்தணப்பில் இருந்தார் கட்டாயம் செந்தீயில் விழுந்த புழுவென ஆவார்!

வள்ளுவர் கூறுவாரே என்பு இலதனை வெயில் சுடுவதை! இங்கோ என்பு உளதையே சுட்டெரிக்கும் வெப்பம்! தமிழகம் பெற்ற பேறு இவ்வெப்பும் அறியாது! இக்குளிர் நடுக்கும் அறியாது! இப்பாலையும் அறியாது! செயற்கைப் பாலையை அன்றிக் காலமாறல் பாலையை அன்றி இயற்கைப் பாலை இல்லாமையால் தான்,

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"

எனச் சிலம்பு கூறியது.

சாலையோரம் காணப்பட்டவர், தொழிலில் ஈடுபட்டவர், வீடுகடைகளில் இருந்தவர் ஆகிய அனைத்து ஆடவர் தலைகளும் இப்பெருவட்டுச் சுமை அமைத்துக் கொள்ள நேர்ந்தது வெயில் என்னும் இயற்கையை (ஊழ்) மக்கள் கற்றுக் கொண்டு கடைப் பிடித்த பாதுகாப்பு வளையம் என்பது புலப்பட்டது.