பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

233

கோவாவின் வடக்கு எல்லை மராத்திய மாநிலம்; தெற்கிலும் கிழக்கிலும் கருநாடக மாநிலம்; மேற்கே அரபிக்கடல்; மேற்குத் தொடர்ச்சி மலையால் இப்பகுதி பெரிதும் மலைவளம் நீர்வளம் உடையதாக உள்ளது. குறுக்கும்மறுக்கும் ஓடும் ஆறுகளால், ஊடுநிலம் உண்டாகித் துவுகள் பலவற்றைக் கொண்டதாக உள்ளது. நெல்லும் தென்னையும் பரக்கக் காண்பன! அழகொடு பின்னிப் பிணைந்ததும் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததும் ஆகியது கோவா!

கருநாடகப் பகுதியைக் கடந்து கேரளம் பாலக்காடு சென்று சோரனூரை அடைந்தோம்! சோரனூரில் வண்டி மாறிக் கோவைக்கு வந்தோம். யான் மறு நாள் காலை புதுமனை விழா நிகழ்த்தவும் ஒரு திருமண விழா நிகழ்த்தவும் இசைந்திருந்தமையால் கோவையில் இருந்து நேரே திருச்சிராப்பள்ளி எய்தினேன். வேலாயுதரும் சரோசினியாரும் ஈரோட்டுக்குச் சென்றனர்.

23.02.2009 இல் புறப்பட்ட வடநாட்டுச் செலவு 07.03.2009 இல் நிறைவடைந்தது.

ஒரு மொத்தமாக எம் வட புலச் செலவை எண்ணிப் பார்த் தால் ஒரோ ஓர் ஊடகமே ஒளி செய்கின்றது அஃது உயிர்நிலை ஊடகம்! 'உயிர்நிலை ஊடகம்' எது? எனின், அது 'அன்பு' என்பதாம்! "அன்பின் வழியது உயிர்நிலை" என்பது வள்ளுவம் அல்லவோ! அவ்வூடகம் அழைத்தது: விருந் தோம்பியது; பொருளைப் பொருளாக எண்ணாமல் போக்குவரவு புரிய உதவியது; நேயம் நெஞ்சத் துணையாய் நின்று நிலவியது! இத்தகு சுற்றுலாவில் இது மூன்றாவது. அன்பாம் உயிர்நிலை 'ஊடகம்' ஆக வேண்டுமானால் அதற்கு ஒருபக்க இணைவு மட்டும் போதாது இருபக்க இணைவு வேண்டும். இணைவு என்பதிலேயே இரண்டு உண்டு அல்லவா! இருபக்கங்களும் இசைந்து இயல வேண்டும்! அன்பு ஒற்றை வழிப்பாதை இல்லை, இரட்டை வழிப்பாதை என்பது தானே உலகெலாம் உணர்ந்த பெருநெறிவிளக்கம்.

உலகம் இரட்டை வழிச்சாலையை, நால்வழிச் சாலை எண்வழிச் சாலை என ஆக்கி வரும் புறச் சாலைகளைக் கண்டுநாம் வியக்கிறோம்! எத்தனை வழிச் சாலைகளில் இயங்கினால் என்ன? பொறி ஊர்திகளைப் பொறுத்த வழிகள் தாமே அவை. ஆனால்