பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஐம் பொறியாம் உறுப்புப் பொறிகளும் மனமாம் உணர்வுப் பொறியும் ஆகிய ஆறு அகப் பொறிகளும் போக்கு வரவு புரிய அன்பாம் உயிர்நிலை ஊடகம் இருபாலும் இயைந்திருத்தல் வேண்டும் அல்லவோ! எண்ண வழியது அது!

-

எண்ணம் விரிந்தால் முதலாழ்வார் மூவராகலாம்! முதலாழ்வார் மூவரைப் பற்றியது என்ன? பொய்கையார் படுத்திருக்கிறார் அடை மழை இரவுப் பொழுது! பூதத்தார் வருகிறார்;பொய்கை படுத்திருக்கும் ‘துச்சில்’ கதவைத் தட்டுகிறார்! மழைக்குத் தலைமறைக்க இடமுண்டோ? எனவினாவுகிறார்!

உள்ளே இருந்து குரல்வருகிறது ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்! உள்ளே போன பூதத்தார் பொய்கை யாரோடு இருந்து கொண்டார்! இன்னும் ஒருவர் கதவைத் தட்டுதல் கேட்டது அவர்பேயார்! அடைமழை கொட்டுகிறது! தலைமறைக்க

டம் உண்டோ? இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் என உள்ளிருந்து ஒலி வருகின்றது பேயார் புகுகின்றார்! மூவரும் நிற்கின்றனர்! நின்ற போது முதலில் இயல்பாக மூவரும் நின்றனர்! அதன்பின் நிற்க நெருக்கடியாயிற்று! நாலாமவர் ஒருவர், தாமே புகுந்து கொண்டார்! அவர் நெடுமாலாம்! இச்செய்தி உணர்த்துவது என்ன? உள்ளம் விரிந்தால் உதவிவிரியும் உறவு விரியும்! உலக அளவு விரியும்! விரிய விரிய மாந்தர் இறைநிலை எய்துவார்! நாம் உணரும் பிழிவு என்ன?

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்;

உள்ளம் சிறுத்தால் உறவும் பகையே!

என்பது! உள்ளம் விரியட்டும்! உறவு விரியட்டும்! உலகமாகச் சிறக்கட்டும் என நிறைவு செய்வோம்!