பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

நடை கொண்டு வந்தது கல்லானை! காவலன் கையில் இருந்த கரும்பை ‘கடகடார்! என ஒடித்துத் தின்று சாறு வாயொழுக நின்றது! பாண்டியன் வியந்தான்; சித்தர் மறைந்தார்! நான் சொன்ன செய்தி சரிதானே! : நீ சொல்வதில் சரியில்லாமல் என்ன இருக்கும்? சரிதானே!

பொன் : பிற்காலத்தில் இப்படி ஒரு செய்தி நடந்ததாகவும் கேள்விப் பட்டுள்ளேன்

கண் : அது என்ன செய்தி?

பொன் : இத் திருக்கோயிலில் சீதாலப் புத்தகம் என ஒன்று ள்ளது. அதில் அச் செய்தி உள்ளது. அதனைக் கோயில் மாநகர் என்னும் நூல் எழுதிய திரு.கி.பழநியப்பன் அவர்கள் கூறியுள்ளபடி கூறுகிறேன்.

கண்

நல்லது.

பொன் : "கி.பி. 1310 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் நாள், மாலிக்காபூர் மதுரையை முற்றுகையிட்டுப் பாண்டியன் கோட்டையைக் கைப்பற்றினான். கோட்டையையும் ஊரில் இருந்த பல கோயில்களையும் இடித்தான். மீனாட்சி சுந்தரர் கோயிலின் பெரும்பகுதி இடிபட்டது. அப்பொழுது மாலிக்காபூர் படையைச் சேர்ந்த திருவேகம்பராயர் என்பவர் கோயிலைப் பார்க்க வந்திருந்தார். சுவாமி கோயில் முதற் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது கருவறையைச் சுற்றி யானைகளின் உருவங்கள் எட்டு இருப்பதைக் கண்டு அதன் விபரம் என்னவென்று கேட்டார். அச்சமயம் எல்லாம் வல்ல சித்தர் சன்னிதியில் தியானம் செய்து கொண்டிருந்த சொக்கநாதர் என்ற ஒரு துறவி அவ் யானைகளைப் பற்றி விளக்கியதுடன் கல்யானைக் கரும்பு கொடுத்த திருவிளையாடலையும் விவரமாகக் கூறினார். அதைக் கேட்ட இராயர் அஃது உண்மை யாயின், இந்த யானை இப்பொழுது கரும்பைத் தின்னுமோ? என்று வினாவினார். 'அவ்வாறே தின்னும்' என்று துறவி கூற, இராயர், மாலிக்காபூரையும் அவ் வதிசயத்தைக் காண அழைத்து வந்தார். துறவி மாலிக்காபூரிடமே கரும்பைக் கொடுத்து யானைக்குத் தரச்சொன்னார். அவன் கைநீட்டித் தந்தான்.