பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண் :

மதுரைக் கோயில் வரலாறு

89

விமானத்தில் இருந்த கல்யானை தன் துதிக்கையை நீட்டிக் கரும்பை வாங்கித் தின்றது. அவ் வற்புதத்தைக் கண்ட மாலிக்காபூர், 'ஆகா; இங்கு அல்லா இருக் கிறார்!' என்று கூறி 'மேற் கொண்டு கோயிலை இடிக்க வேண்டா' என்று கட்டளையிட்டான். ஆனால் அதற்குள் கபாலியுடையவர் திருமதிலுக்கு வெளி யிலுள்ள பெரும் பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. அத் திருமதிலுக்கு உட்பட்ட சுவாமி கோயில் கருவறை முதல் ஆறுகால் பீடம் வரை உள்ள பகுதிகள்மட்டும் மாலிக்காபூரின் ஆணையின் படி இடிபடாமல் தப்பின. துறவியைத் தேடும்பொழுது அவர் அங்குக் காணப்படவில்லை. இது சோமசுந்தரப் பெருமான் திருவிளையாடலே என்று கருதப்பெற்றது. நல்லது. இது புதிய செய்தி! புதிய திருவிளையாடல்! “பெரியதினும் பெரியதுமாய்ச் சிறியதினும் சிறியதுமாய் அரியதினும் அரியதுமாய் எளியதினும் எளியதுமாய்க் கரியதுமாய்க் காண்பானும் காட்சியுமாய் அவைகடந்த துரியமுமாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே" என்னும் பரஞ்சோதியார் வாக்கால்

வணங்கிச்

சித்தரிடமிருந்து விடைபெற்றுக் கொள்வோம்.

பொன் : எல்லாம் வல்ல இச் சித்தர் கோயிலை விக்கிரம பாண்டியன் (கி.பி. 1315-1347) என்பான் அமைத்தான் என்பதை நாம் நினைவு கொள்வோம். ச் சித்தர் கோயிலுக்குத் தென்பக்கம் சொக்கர் கருவறைச் சுற்றுச்சுவரில் சங்கு சக்கரக் கையினளாகத் துர்க்கை எழுந்தருளியுள்ளாள். துர்க்கைக்கு எதிரே வடக்குப் பக்கம் இது கடம்பவனம் என்பதற்குச் சான்றான பட்டுப்போன பழைய கடம்பமரம் உள்ளது. இதற்குத் திருப்பனந்தாள் மடத்தார் வெள்ளித் தகட்டுறை பொதிந்துள்ளனர். இதற்குக் கிழக்கே கனகசபை உள்ளது. இந்த அச்சரலிங்க மண்டபத்தில், மும்மூன்றாகப் பதினேழு வரிசையில் 51 இலிங்கங்கள் உள்ளன.

கண்

அட்சர இலிங்கங்களா?