பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

93

துணிந்தான். அவனுக்கு அருள் புரியுமாறே இறைவன் கால் மாறியாடினான்! இத்திருவிளை யாடலை உலகுக்கு விளக்கும் வகையால் இறைவன் காட்சி வழங்கிக் கொண்டிருக்கிறான்!

கால்மாறி யாடும் கற்பகத்தைக் கண்டு களிகூர்ந்தான் வேந்தன்! இங்கே பதஞ்சலியாரும் புலிக்காலாரும் நிற்கின்றனர்! இறைவன் கால்மாறியாடும் செப்புத் திருமேனி ஒன்றும் அழகாக உள்ளது. படிகளும் தூண்களும் கூட வெள்ளிமன்றம் என்பதை வெளிப் படுத்துகின்றன! இறைவன் தோற்றமும் துடிப்பான ஆட்டமும் அசைக்கிறது ஆட்டுகிறது; உணர்வைத் தட்டி எழுப்பி உயரத்தில் உயரத்திற்குப் பறக்க வைக்கிறது. இஃது

"அடிபேரில் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம் மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்

அறிந்தாடும் ஆற்றா தரங்கு"

என்று காரைக்கால் அம்மையார் பாடிய 'அற்புதப் பாடலையே நினைவூட்டுகிறது.

பொன் : அம்மை திருமுன் சிலைகள் இல்லை என்பதைக் கண்டோமே! இங்கும் இருக்கிறதா?

கண்

இல்லையே!

பொன் : ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

கண்

நன்றே நினைமின்

என்னும் மந்திரப் பொருள் விளக்கம் இதுதான்.

க்

-

நல்லது. இக் கருவறை, விமானம் இவையெல்லாம் செய்தவர் யார்? நீ கூறவில்லையே!

பொன் : இது மிகப் பழமையானது! இந்த விமானம் திசைக்கு இரண்டாக எட்டு யானைகளும், திசைக்கு எட்டாக முப்பத்திரண்டு சிங்கங்களும், திசைக்குப் பதினாறாக அறுபத்து நான்கு பூதங்களும் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற அமைப்பு உடையது. இது விண்ணவர் கோமானால் சமைக்கப்பட்டது என்பர். இனிச் சுற்று மண்டபங்களை நாம் காணலாம். முதலாம் இரண்டாம்