பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

13. ஆயிரக்கால் மண்டபம்

தளவாய் அரிய நாதமுதலியார் கட்டியது அன்றோ இது?

பொன் : ஆம். அவர் உருவம் இவ்வாயிலின் மேல்பால் குதிரையின் மேல் இதோ இருப்பதைப் பார்!

கண்

குதிரைமேல் அமர்ந்து தாவிச் செல்ல விரையும் தளவாய் உருவம் சிறியதுதான்! ஆனால் அவர் செயல்திறமும் சூழ்ச்சி வன்மையும் அறிவுக் கூர்ப்பும் எவ்வளவு பெரியன!

பொன் : குதிரை முன்னிரு கால்களையும் தூக்கிப் பாய்ந்து நிற்பதும், அதற்குத் தக்கவாறு டப் பின்காலை அழுத்தமாக ஊன்றி நிற்பதும் வலப் பின்காலை எடுத்திருப்பதும் ஆடல்மா என்பதை அருமையாகக் காட்டுகின்றன.

கண்

தொங்கும் மிதிவாரில் (அங்கபடியில்) காலை வைத்துள்ளார் தளவாய்.

பொன் : அந்தக் காலையும், தூக்கிய குதிரைக் காலையும் இணைத்திருத்தல் இன்னும் பேரழகாம். தாடியுடன் இருக்கும் அரியநாதர் கையிலே கோல் கொண்டுள்ளார்!

கண்

விசுவநாத நாயக்கரின் தோழராகி அரசுக் கோல் கொண்டிருந்த தளவாய், இங்கே கோல் கொண்டு கொலு வீற்றிருப்பது என்ன வியப்பா?

பொன் : கல்லிலேயே குதிரைக்குக் கடிவாளம் அமைத்து அக்கடிவாளத்தைப் பற்றி இழுப்பதால் வாயை அகலத் திறந்துள்ளது. குதிரை என்பதைச் சிற்பி நன்றாகவே காட்டியிருக்கிறான்.

கண்

அரியநாதர் உச்சியில் முடியும், காதில் குண்டலமும் இருந்தமையை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.